மேம்படுத்தப்பட்ட தூய்மைத் திட்டம் கடைத்தொகுதிகள் உட்பட கூடுதலாக 2,700 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்

மேம்­ப­டுத்­தப்­பட்ட சுகா­தார முறை கடந்த ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. முதி­யோர் பரா­ம­ரிப்பு, சமூக சேவை மற்­றும் பள்ளி வச­தி­கள், உணவு விடு­தி­கள், சிற்­றுண்­டி நிலையங்கள், பெரிய கடைத் தொகு­தி­கள் உட்­பட சுமார் 2,700 இடங்­களுக்கு விரி­வு­ப­டுத்­தப்­படும்.

தூய்மை, சுகா­தா­ரத் தரங்­க­ளு­டன் வழக்­க­மான கிரு­மி­நா­சி­னியை கட்­டா­யப்­ப­டுத்­தும் இந்த முறை, ஏப்­ரல் 1 முதல் தனி­யார், சிறப்­புப் பள்­ளி­கள், இளை­யர் இல்­லங்­கள், முதி­யோர் நட­வ­டிக்கை நிலை­யங்­கள் போன்ற இடங்­க­ளுக்­குப் பொருந்­தும்.

இந்­தப் புதிய முறை கடைத் தொகு­தி­களில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி­யும் மாண­வர் பரா­ம­ரிப்பு மையங்­கள், மத­ர­ஸாக்­கள் போன்ற பிற பள்­ளி­களில் அக்­டோ­பர் 1ஆம் தேதி முதல் நடை­மு­றைக்கு வர உள்­ளது.

திட்­டத்­தில் தொடக்­க­மாக காப்­பிக் கடை­கள், பாலர்­பள்­ளி­கள், வழக்­க­மான பள்­ளி­கள் உட்­பட சுமார் 3,700 இடங்­களில் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்­டது என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

ஒவ்­வோர் இடத்­தி­லும் கழி­வறை­கள், மின்­தூக்­கி­கள், குப்­பைத் தொட்டி மையங்­கள், அதி­க­மா­னோர் தொடும் மேற்­ப­ரப்­பு­கள் ஆகி­ய­வற்றை தின­சரி சுத்­தம் செய்­தல், கிருமி நீக்­கம் செய்­தல் நட­வ­டிக்­கை­கள் எத்­தனை முறை மேற்­கொள்­ளப்­பட்­டன என குறிப்­பி­டு­வ­தும் திட்­டத்­தின் கீழ் உள்ள முக்­கிய தேவை­கள்.

பூச்சிகளை சமாளிக்கும் திட்டம், போது­மான உப­க­ர­ணங்­கள், துப்­பு­ரவுத் திர­வங்­கள் ஆகி­யவை மற்ற அடிப்­படைத் தேவை­களில் அடங்­கும்.

"வளா­கத்­தின் மேலா­ளர்­கள் தங்­கள் வளா­கத்­திற்­குள் இரைப்பை குடல் அழற்சி போன்ற தொற்று நோய்­கள் ஏற்­ப­டு­வ­தைத் தடுப்­ப­தற்­கான தங்­கள் பொறுப்பை உணர்ந்­தி­ருக்க வேண்­டும்.

"வளாக மேலா­ளர்­கள், சுற்­றுச்­சூ­ழல் கட்­டுப்­பாட்டு ஒருங்­கி­ணைப்­பா­ளர்­க­ளாக அல்­லது அதி­கா­ரி­களாக தகுந்த பணி­யா­ளர்­களை நிய­மிக்க வேண்­டும்.

"மேலும் அந்த இடங்­களில் தூய்­மையை மேம்­ப­டுத்­த­வும், மதிப்­பாய்வு செய்­ய­வும், கண்­கா­ணிக்­க­வும் உதவ வேண்­டும். நிய­ம­னம் செய்­யப்­பட்ட ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள், அலு­வ­லர்­கள் இரு­வ­ரும் திட்­டத்­திற்­குத் தயா­ராக பயிற்­சி­யில் கலந்­து­கொள்ள வேண்­டும்," என்று டாக்­டர் கோர் கூறி­னார்.

இன்­று­வரை 3,600க்கும் மேற்­பட்ட சுற்­றுச்­சூ­ழல் கட்­டுப்­பாட்டு ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் பயிற்சி பெற்­றுள்­ள­னர் என்றும் இந்த ஆண்டு மேலும் 2,700 ஒருங்­கிணைப்­பா­ளர்­க­ளுக்­கும் அதி­காரி­களுக்­கும் பயிற்சி அளிப்­பதை நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது என அமைச்சர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!