95-ஆக்டேன் பெட்ரோல் விலை உயர்வு

உக்­ரே­னுக்­கும் ரஷ்­யா­வுக்­கும் இடை­யி­லான போரின் எதி­ரொ­லி­யாக, பர­வ­லாக அதி­கம் பேர் பயன்­ப­டுத்­தும் 95-ஆக்­டேன் ரகப் பெட்­ரோ­லின் விலை கூடி மூன்று வெள்­ளிக்­கும் மேல் ஆனது.

ஷெல் நிறு­வ­னம் திங்­கட்­கி­ழமை அதன் விலையை எட்டு காசு உயர்த்­தி­ய­தில், லிட்­ட­ருக்கு மூன்று வெள்ளி 6 காசுக்கு அது விற்­பனை ஆயிற்று.

மூன்று வாரங்­களில் மூன்று முறை பெட்­ரோல் விலை ஏற்றம் கண்டது. அதன் விளை­வாக, இப்­போது ஒரு லிட்­டர் 95-ஆக்­டேன் பெட்­ரோ­லின் விலை 28 காசு கூடி­யுள்­ளது.

கால்­டெக்ஸ், எஸ்ஸோ, சைனோ­பெக் ஆகிய நிறு­வ­னங்­கள் முறையே லிட்­ட­ருக்கு $2.98, $2.95 மற்­றும் $2.81 என விலையை நிர்­ண­யித்­துள்­ளன.

ஒரு பீப்­பாய் பிரென்ட் கச்சா எண்­ணெ­யின் விலை 130 டாலரை நெருங்­கிக்­கொண்­டி­ருப்­ப­தால், மற்ற நிறு­வ­னங்­களும் இந்த மாத இறு­திக்­குள் 95-ஆக்­டேன் ரகப் பெட்­ரோல் விலையை மூன்று வெள்­ளிக்கு உயர்த்­தும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

92-ஆக்­டேன் ரக பெட்­ரோல் சற்று விலை மலி­வாக இருந்­தா­லும், ஷெல், சைனோ­பெக் ஆகி­யவை அந்த ரக பெட்­ரோலை விற்­பனை செய்­வ­தில்லை.

கடந்த மூன்று வாரங்­களில் டீச­லின் விலை­யும் 30 காசுக்­கு மேல் உயர்ந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!