சாய் சீ அவென்யூ உணவகத்தில் தீ

சாய் சீ அவென்­யூ­வில் அமைந்­தி­ருக்­கும் புளோக் 29ல் உள்ள காப்­பிக் கடை­யில் நேற்று காலை தீ மூண்­டது; அதில் யாருக்­கும் காய­மில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று காலை 6.45 மணி­ய­ள­வில் தீ மூண்ட உண­வ­கத்­தைச் சென்­ற­டைந்­த­தாக சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது. தீய­ணைப்­பா­ளர்­கள் தண்­ணீ­ரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்­த­னர்.

அங்­கி­ருந்து 15 பேர் வெளி­யேற்­றப்­பட்­ட­தா­க­வும் சிலர் தீய­ணைப்பு வீரர்­க­ளு­டன் இணைந்து தீயை அணைக்க உத­வி­ய­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

அடுப்­பில் சமைக்­கப்­பட்ட உணவு அள­வுக்­க­தி­க­மான வெப்­பத்­தால் தீப் பிடித்­த­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. அடுக்கு­மா­டிக் குடி­யி­ருப்­பின் தாழ்­வான தளங்­க­ளைப் புகை சூழ்ந்­த­தா­க­வும் தீய­ணைப்­பா­ளர்­கள் கிட்­டத்­தட்ட அரை மணி நேரத்­தில் தீயை அணைத்­த­தா­க­வும் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

பொது­மக்­கள் எரியும் அடுப்பைக் கவ­ன­மின்றி விட்­டுச் செல்­ல­வேண்­டாம் என்று குடி­மைத் தற்­காப்­புப் படை அதன் ஃபேஸ்புக் பதி­வில் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

அடுப்­பை­யும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளை­யும் எண்­ணெய்ப் பசை­யில்­லா­மல் சுத்­த­மாக வைத்­தி­ருக்­கும்­ப­டி­யும் அது ஆலோ­சனை கூறி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!