வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு புதிய விதிமுறைகள்

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் எல்லா லாரிகளிலும் இனி வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

மேலும், அத்தகைய லாரிகளில் மழையிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்க, கான்வாஸ் தார்ப்பாய்கள் போடப்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன், ஓட்டுநர் சோர்வு அடைந்தால் அல்லது அவர் பாதுகாப்பற்ற முறையில் லாரியை ஓட்டினால், அவரை நிறுத்துவதற்கு ஒருவர் வாகனத்தில் நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும், வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் ஓட்டுநர்களுக்கு போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதி செய்யவும் மனிதவள அமைச்சு புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யும்.

குறிப்பாக, பணியிடத்தில் வேலையும் செய்யும் ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பதை முதலாளிகள் உறுதி செய்யவேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது நாளுக்கு அதிகபட்சம் 12 மணிநேரமும் மாதத்துக்கு அதிகபட்சம் 72 மணிநேரம் கூடுதல் நேரமும் (ஓவர்டைம்) வேலை செய்ய முடியும்.

இந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு கூடுதலாக புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் புதன்கிழமை (மார்ச் 9) அன்று நாடாளுமன்றத்தில் புதிய நடவடிக்கைகளை அறிவித்தார்.

லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பது இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என்றார் அவர்.

அதே நேரத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் எல்லாரையும் பேருந்துகளில் ஏற்றிச்செல்வது சிரமம் என்று டாக்டர் கோர் மீண்டும் வலியுறுத்தினார்.

தற்போது சில குறிப்பிட்ட எடை ஏற்றுச்செல்லும் வகை லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளும் வேக எச்சரிக்கைக் கருவிகளும் கட்டாயம் வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இனி அந்த விதிமுறை எல்லா லாரிகளுக்கும் பொருந்தும்.

புதிய விதிமுறைகள் குறித்து போக்குவரத்து காவல்துறை தொழில்துறையுடன் சேர்ந்து பணியாற்றி வருவதாகவும் மேல்விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டாக்டர் கோர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!