சிங்கப்பூரின் எல்லைகள் தொடர்ந்து படிப்படியாகத்  திறக்கப்படும்

சிங்கப்பூர் அதன் எல்லைகளைத் தொடர்ந்து படிப்படியாகத் திறக்கவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

கொவிட்-19 தொற்றுடன் உலகம் இணைந்து வாழ கற்றுக்கொள்ளும் நிலையில், மற்ற நாடுகளுக்கு சிங்கப்பூர் அதன் எல்லைகளைத் திறப்பது அவசியம் என்றார் அமைச்சர்.

தொற்றுச் சூழலுக்கு முன் ஒப்பிடும்போது சாங்கி விமான நிலையத்திலிருந்து பறந்துசெல்லும் நகர்களில் 58 விழுக்காட்டு சேவைகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளன.

விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானச் சேவைகள் 38 விழுக்காடு எட்டியுள்ளன.

விடிஎல் திட்டத்தின் கீழ் சென்ற டிசம்பர் மாதம் நிலையத்துக்குப் பயணிகளின் வரவு 15 விழுக்காடாக இருந்தது. இந்த எண்ணிக்கையை 50 விழுக்காட்டுக்கு உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சொன்னார்.

துபாய், கத்தார், இஸ்தான்புல் ஆகிய விமானப் போக்குவரத்து மையங்களில் பயணிகளின் எண்ணிக்கை 70 விழுக்காடு எனக் கூறப்பட்டது.

எல்லைகளை மீண்டும் திறக்கும் அடுத்தக் கட்டத்தில் சிங்கப்பூர் அதன் அணுகுமுறையை மாற்றும் என்றார் அமைச்சர்.

விடிஎல் திட்டத்திலிருந்து விலகி, தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பயணிகள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ தேவையில்லை என்ற உத்தியை அரசாங்கம் கையாள இருப்பதாக திரு ஈஸ்வரன் விவரித்தார்.

இதன் வழி உலகின் அனைத்து நாடுகளுக்கும் சிங்கப்பூரின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்றார் அமைச்சர்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!