ஒரு காலத்தில் உடல்நலனைக் கவனிக்காத அைமச்சர் ஓங்

இளம் வய­தில் தனது உடல்­ந­லனை சரி­யா­கக் கவ­னித்­துக்கொள்­ள­வில்லை என்­றும் அத­னால் தமக்கு ரத்­தக் கொழுப்பின் அளவு அதி­க­மாக இருந்­த­தா­க­வும் சுகா­தார அமைச்­சர் ஓங் யீ காங் தெரி­வித்­துள்­ளார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் சுகா­தார அமைச்­சுக்­கான ஒதுக்­கீடு பற்­றிய விவா­தத்­தின்­போது திரு ஓங் பேசி­னார்.

இளம் வய­தி­லேயே நாட்­பட்ட நோய் வரா­மல் தடுக்­கும் நட­வ­டிக்­கை­களைப் பாதிக்­கப்­பட்ட நோயாளி­கள் ஏன் எடுப்­ப­தில்லை என்று பல மருத்­து­வர்­கள் சிந்­திப்­ப­தா­க­வும் அது தமக்­குப் புரி­வ­தா­க­வும் திரு ஓங் குறிப்­பிட்­டார். தற்­போது 50 வய­தைத் தாண்டி­யுள்ள திரு ஓங், 30, 40 வயதுகளில் இருந்தபோது உடல்­ந­ல­னைக் கவ­னித்­து­க்கொள்ள வேண்­டிய முக்­கி­யத்­து­வம் தமக்­குப் புரி­ய­வில்லை என்று சொன்­னார்.

மருத்து­வ­ரான தமது நண்­ப­ரின் அறி­வு­ரை­யைக் கேட்­டுத் தமது போக்கை மாற்­றிக்­கொண்­ட­தாகவும் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரி­வித்­தார்.

"குறிப்­பாக, முன்­ன­தா­கவே நோய்த் தடுப்பு நட­வ­டிக்கை எடுத்­த­தால் வய­தான பிறகு நான் இதய அறுவை சிகிச்சை மேற்­கொள்­ளத் தேவைப்­ப­டா­மல் போயிருக்கலாம், அல்­லது என் குடும்­பத்­தா­ரை­யும் நெருக்­க­மா­ன­வர்­க­ளை­யும் இன்­னலுக்கு ஆளாக்கி எனது உயி­ரைப் பலி­வாங்­கக்­கூ­டிய மாரடைப்பைத் தவிர்த்திருக்கலாம்," என்றார் திரு ஓங்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!