பெட்ரோல் விலை $3

உல­க­ள­வி­லான எண்­ணெய் விலை­யின் தாக்­கம் சிங்­கப்­பூ­ரில் நன்கு உண­ரப்­பட்டு உள்­ளது. ஒரு பீப்­பாய் கச்சா எண்­ணெய்­யின் விலை US$130க்கு ஏறி­ய­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் அனைத்து வகை­யான பெட்­ரோ­லின் விலை­யும் 3 வெள்­ளி­யைக் கடந்­து­விட்­டது. அதே­

நே­ரம் ஒரே ஒரு வகை பெட்­ரோல் மட்டும் 4 வெள்­ளியை நெருங்­கிக்­கொண்டுள்­ளது.

கேஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கத்­தின் எரி­

பொ­ருள் விலை கண்­கா­ணிப்­புப் பிரி­வான 'ஃபுயூவல் காக்கி' நேற்று விலை நில­வ­ரத்தை வெளி­யிட்­டது.

அதன்­படி, இங்­குள்ள இதர நான்கு எண்­ணெய் விநி­யோக நிறு­வ­னங்­களும் விலையை ஏற்­றிய நிலை­யில் சீனா­வுக்­குச் சொந்­த­மான எஸ்­பிசி மட்­டும் நேற்று பிற்­ப­க­லில் விலை ஏற்­றத்தை அறி­வித்­தது.

புதிய விலை­க­ளின்­படி, பெரும்­பா­லான கார்­கள் பயன்­ப­டுத்­தும் 92-ஆக்­டேன் ரக பெட்­ரோல் லிட்­ட­ருக்கு $3 என கால்­டெக்ஸ், எஸ்ஸோ மற்­றும் எஸ்­பிசி ஆகி­ய­வற்­றின் எண்­ணெய் நிரப்பு நிலை­யங்­களில் விற்­கப்­ப­டு­கிறது. ஷெல் மற்­றும் சினோ­பெக் நிறு­வ­னங்­கள் இந்த வகை பெட்­ரோலை கையா­ள­வில்லை.

அதே­நே­ரம், 95-ஆக்­டேன் ரக பெட்­ரோல் விலை $3.03 (எஸ்­பிசி), $3.23 (ஷெல்), 98-ஆக்­டேன் ரக பெட்­ரோல் விலை $3.72 (ஷெல்) என நில­வ­ரம் வெளி­யாகி உள்­ளது. பிரி­மி­யம் ரக பெட்­ரோல் 98-ஆக்­டேன் லிட்­ட­ருக்கு $3.64 என சினோ­பெக் நிறு­வ­ன­மும் $3.72 என கால்­டெக்­ஸும் $3.94 என ஷெல்­லும் விற்­கின்­றன.

95-ஆக்­டேன் பெட்­ரோ­லின் விலை லிட்­ட­ருக்கு 8 காசு முதல் 17 காசு வரை ஏறி­விட்­டது. பிப்­ர­வரி 14 முதல் இதன் விலை 16 விழுக்­காடு, அதா­வது 45 காசு வரை உயர்ந்­துள்­ளது. தள்­ளு­படி போக இந்த ரக பெட்­ரோ­லின் ஆகக் குறைந்த விலை $2.38 என்­பது சினோெபக்­கின் மூன்று நிலை­யங்­களில் காணப்­பட்ட நில­வ­ரம்.

அதே­போல, 92-ஆக்­டேன் விலை, தள்­ளு­ப­டிக்­குப் பின்­னர் $2.43 (கால்­டெக்ஸ்), $2.58 (எஸ்ஸோ) என விற்­கப்­ப­டு­கிறது.

உலகளாவிய எண்ணெய் விலை உயர்வின் தாக்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!