பெரிய கார்களின் சிஓஇ 9 ஆண்டு காணாத உச்சம்

சிஓஇ எனப்படும் வாகன உரிமைச் சான்றிதழ் கட்ட ணங்கள் நேற்றைய ஏலத்தில் எல்லாப் பிரிவுகளிலும் ஏற்றம் கண்டன. 1,600 சிசி கொள் திறன் கொண்ட கார்களுக் கான 'ஏ' பிரிவு கட்டணம்

8.7 விழுக்காடு ஏற்றம் கண்டு $68,501ஆக இருந்தது. இரு வாரங்களுக்கு முன்னர் நடை பெற்ற ஏலத்தில் இப்பிரிவின் கட்டணம் $63,000ஆக இருந்தது. 'பி' பிரிவுக்கான கட்டணத்தில் 1.4 விழுக்காடு உயர்வு காணப்பட்டது.

முந்திய ஏலத்தில் $93,590 ஆக இருந்த கட்டணம் நேற்றைய ஏலத்தில் $94,889 என ஏற்றம் கண்டி ருந்தது.

பெரிய கார்களுக்குரிய பொதுப் பிரிவு சிஓஇ கட்ட ணமும் 6.2 விழுக்காடு

அதிகரித்து $98,890 ஆனது. இதற்கு முன்னால் இது $93,102 ஆக இருந்தது.

இப்பிரிவில் 2013 ஜனவரி மாதத்திறகுப் பின்னர் இப் போதுதான் அதிக ஏற்றம் நிகழ்ந்திருக்கிறது. அப்போது $97,889 என்பதே உச்சமாக இதுவரை இருந்து வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!