தைப்பூச திருவிழாவை உலகநாடுகளின் கலாசார மரபுப் பட்டியலில் சேர்க்க சிங்கப்பூர் பரிசீலிக்கிறது

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் யுனெஸ்கோ அமைப்பின் புலன் அறியாத கலாசார மரபுடைமை பட்டியலுக்கு நியமிப்பதற்காக, தைப்பூச திருவிழா உள்ளிட்ட பத்து கூறுகளை சிங்கப்பூர் தேர்வு செய்துள்ளது.

சிங்கே ஊர்வலம், டிக்கே பாராட் எனும் மலாய் இசை, பிள்ளைப்பேறு தொடர்பான பாரம்பரிய பழக்க வழக்கங்கள், குவே இனிப்பு வகையை சமைத்தல், பெரானாக்கான் பாணி பூத்தையல், ஆர்க்கிட் மலர் வளர்த்தல், போன்ற மற்ற அம்சங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கலாசாரம், சமூகம், இளையர் துறைகளுக்கான துணை அமைச்சர் லோ யென் லிங் வியாழக்கிழமை அன்று இதைத் தெரிவித்தார்.

யுனெஸ்கோ அமைப்பின் புலன் அறியாத கலாசார மரபுடைமை பட்டியலில் தன் சார்பில் சேர்க்க சிங்கப்பூர் இரண்டாவது அம்சத்தை தேர்வு செய்யவேண்டும்.

இந்த பத்து அம்சங்கள் குறித்து வரும் மாதங்களில் தேசிய மரபுடைமை வாரியம் பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கும் என்று திருவாட்டி லோ கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை, குழு கலந்துரையாடல்களை நடத்தி 170 பேரின் கருத்துகளைக் கேட்டு இந்தத் அம்சங்களைத் தேர்வு செய்தது.

யுனெஸ்கோ அமைப்பின் இந்த கலாசார மரபுடைமை பட்டியலில் சிங்கப்பூர் அதன் உணவங்காடி பாரம்பரியத்தை தன் கலாசார மரபாக 2020ஆம் ஆண்டில் தேர்வு செய்தது.

இதைத் தவிர, தேசிய மரபுடைமை வாரியம் அடுத்த மாதம் சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகம் குறித்த நடமாடும் கண்காட்சியைத் தொடங்கி வைக்கும்.

மேலும், பாடாங் திடலை தேசிய நினைவுச்சின்னமாக இந்த ஆண்டு தேசிய தினம் அன்று அரசிதழில் சேர்க்க, வாரியம் பணியாற்றி வருகிறது.

இது, பாடாங்கின் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!