கத்தி முனையில் கொள்ளை முயற்சி

கத்தி முனை­யில் கொள்­ள­ய­டிக்க முயற்சி செய்த இரு­பது வயது இளை­யரை சீர்­தி­ருத்­தப் பயிற்­சிக்கு அனுப்­பு­வது குறித்து ஆரா­யு­மாறு நேற்று நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவ­ருக்கு பின்­னொரு தேதி­யில் தண்­டனை விதிக்­கப்­படும் எனத் தெரி­கிறது.

வியட்­னா­மி­யர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்த 50,000 வெள்­ளியை டெர்ரி டோங் ஹோங் ஷி, 20, கொள்­ளை­ய­டிக்க முயற்சி செய்­த­ார்.

அந்த வியட்­னா­மி­யர் பணத்­தைக் கொடுக்க மறுத்­த­தால் அவர் கத்­தியை வீசி­யி­ருக்­கி­றார். அதில் வியட்­னா­மி­ய­ரின் முகத்­தில் தையல் போடும் அள­வுக்கு காயம் ஏற்­பட்­டது.

கொள்­ளை­ய­டிக்­கும் முயற்­சி­யில் தோல்­வி­ய­டைந்த டோங் தப்பி ­யோ­டி­விட்­டார். இரண்டு நாட்­க­ளுக்­குப் பிறகு அவரை காவல்துறையினர் கைது செய்த னர். ேடாங்­குக்கு சூதா­டும் பழக்­கம் இருந்­த­தால் அவ­ருக்கு 40,000 வெள்ளி கடன் இருந்ததாக நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இத­னால் கொள்­ளை­ய­டிப்­ப­தற்­கான திட்­டங்­களை டோங் தீட்­டி­னார். விலை மதிப்­பு­மிக்க 'பாடேக் பிலிப்' போன்ற கைக்­க­டி­கா­ரங்­களை விற்­ப­தாக கேரோ­சல் தளத்­தில் தெரி­வித்து பலரை ஈர்த்து அவர் கொள்­ளை­ய­டிக்க முயற்சி செய்­தார். ஆனால் அவர் எதிர்­பார்த்­தது போல் அமை­ய­வில்லை.

கடை­சி­யாக கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மாலை 5.00 மணி­ய­ள­வில் கைக்­க­டி­கா­ரம் வாங்க வந்த வியட்­னா­மி­யரை இயோ சூ காங்­கில் உள்ள ஜெரல்ட் டிரை­வுக்கு வர­வ­ழைத்து அவர் வைத்­தி­ருந்த 50,000 வெள்­ளியை கத்­தி­யைக் காட்டி பறிக்க டோங் முயற்சி ெசய்­தார். அதி­லும் அவர் தோல்வி அடைந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!