கொவிட்-19 சூழலைப் பொறுத்தே மலேசியாவுடன் பயண ஏற்பாடு

மலே­சி­யா­வு­டன் மேலும் பயண ஏற்பா­டு­களை சிங்­கப்­பூர் அனு­மதிக்குமா என்­ப­தில் கொவிட்-19 தொற்று சூழ்­நி­லை­யும் ஓர் அம்சமாக இருக்­கும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று அமைச்­சு­கள்நிலை பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

அத்­த­கைய புதிய ஏற்­பா­டு­க­ளுக்­கான நேரம் முக்­கி­ய­மான ஒன்று என்று அவர் கூறி­னார். இரு நாடு­களின் தொற்று சூழல்­கள் அனு­மதிக்­கும் போது அத்­த­கைய ஏற்­பாடு­க­ளைச் செய்ய முடி­யும் என்று அவர் கூறினார்.

"முன்­கூட்­டியே ஒரு தேதியை நிர்­ண­யிக்க முடி­யாது. இதை நாங்­கள் அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கி­றோம். நில­வ­ரங்­கள் ஒத்து வரும்போது இது பற்றி பேச­மு­டி­யும்," என்று அவர் தெரி­வித்­தார்.

மலே­சியா தன்­ எல்­லை­களை திறந்­து­வி­டப் போவ­தா­க­வும் முற்றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனைத்­து­லக பய­ணி­கள் ஏப்­ரல் 1 முதல் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டிய தேவை­யின்றி மலே­சியா வர அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்றும் மார்ச் 8ஆம் தேதி அறி­விப்பு வெளி­யா­னது.

சிங்­கப்­பூ­ரில் மார்ச் 10 ஆம் தேதி புதி­தாக 16,165 பேருக்கு கொவிட்-19 தொற்­றி­யது.

மலே­சி­யா­வில் சரா­ச­ரி­யாக நாள் ஒன்­றுக்கு ஏறத்­தாழ 30,000 பேர் தொற்­றுக்கு ஆளா­கு­கி­றார்­கள்.

மலே­சியா, சிங்­கப்­பூ­ருக்கு இடை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் தரை­ வ­ழி­யா­க­வும் விமானம் மூல­மும் சென்று வரு­வ­தற்­கான ஏற்­பாடு ஏற்­கெ­னவே அமலில் உள்­ளது.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மக்­கள் தனிமை உத்­த­ர­வின்றி தரை­வ­ழி­யாக பய­ணம் செய்ய கூடு­தல் பேருந்து பய­ணச் சீட்­டு­கள் நேற்று விற்­ப­னைக்கு வந்­தன.

அவற்­றுக்­குத் தேவை அதி­க­மாக இருந்­த­தாக நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!