கிருமித்தொற்று குறைந்தாலும் சுமை குறையவில்லை

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 அன்றாட தொற்று குறைந்து வரும் போதி­லும் பொது மருத்­து­வ­ம­னை­களும் பல­துறை மருந்­த­கங்­களும் தனி­யார் மருத்­து­வர்­களும் இன்­ன­மும் போதிய ஓய்­வின்றி செயல்­ப­டு­கிறார்­கள். சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளுக்­கும் மன­உளைச்­சல் நீடிக்­கிறது.

நல்­ல­வே­ளை­யாக, தீவிர சிகிச்சைப் பிரி­வைப் பயன்­ப­டுத்து­வோர் எண்­ணிக்கை மிக­வும் குறைந்து சமா­ளிக்­கக்­கூ­டிய நிலை­யில் இருக்­கிறது.

என்­றா­லும்கூட வழக்­க­மான வார்­டு­களில், குறிப்­பாக அவ­சர சிகிச்சை பிரி­வில் இன்­ன­மும் நோயா­ளி­கள் அதி­க­மா­கவே இருக்­கி­றார்­கள் என்று நேற்று கொவிட்-19 அமைச்­சு­கள் நிலை பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்டத்­தில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

கடந்த இரு வாரங்­களில் தொற்று குறைந்­தது. அதற்­கேற்ப அவ­சர சிகிச்சை பிரிவை நாடும் மக்­க­ளின் எண்­ணிக்­கை­யும் கொஞ்­சம் குறைந்­தது.

அரசு மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு நாள் ஒன்­றுக்கு சுமார் 3,000 பேர் வந்­தார்­கள். இந்த எண்­ணிக்கை 2,800 ஆகக் குறைந்­துள்­ளது.

இருந்­தா­லும்­கூட இந்த எண்ணிக்கை இன்­ன­மும் அதி­க­மான அள­வு­தான் என்­றார் அவர்.

சுமை­யைக் குறைக்­கும் வகை­யில் நோயா­ளி­களில் சிலர் அரசு மருத்­து­வ­ம­னை­களில் இருந்து தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் போன்ற இதர பரா­ம­ரிப்பு இடங்­களுக்கு அனுப்­பப்­ப­டு­கி­றார்­கள் என்­று அவர் விளக்கினார்.

இத­னி­டையே, மருத்­து­வ­ம­னை­களில் கொவிட்-19 நோயா­ளி­கள் குறை­வ­தா­க­வும் சுமார் 75 விழுக்­காட்டு நோயா­ளி­கள் அவ­சர மருத்­துவ சிகிச்­சைக்­கா­க­வும் முற்றிய நோய்­க­ளுக்கு சிகிச்சை பெற­வும் வரு­கி­றார்­கள் என்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் மருத்­துவ சேவை­கள் துறை இயக்­கு­நர் கென்­னத் மாக் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!