தொடர்ந்து 10ஆவது நாளாகக் குறைந்து வரும் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 11) நிலவரப்படி புதிதாக 15,345 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,396 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ஒப்புநோக்க, கடந்த வியாழக்கிழமை 16,165 பேருக்குத் தொற்று உறுதியானது. அன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தோர் எண்ணிக்கை 1,450ஆக இருந்தது.


கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் நேற்றைய எண்ணிக்கை குறைந்துள்ளது. அப்போது 17,564 பேருக்கு கொவிட்-19 நோய் தொற்றியிருந்தது


வாராந்திர கொவிட்-19 தொற்று அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 1க்குக்கீழ் என 0.92 ஆக உள்ளது. மார்ச் 2ஆம் தேதியிலிருந்து, தொடர்ந்து 10ஆவது நாளாக இந்த விகிதம் 1க்குக்கீழ் உள்ளது.


வியழக்கிழமை 6ஆக இருந்த மரண எண்ணிக்கை நேற்று 13ஆகப் பதிவானது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 39 பேர் இருந்தனர். 170 பேருக்கு உயிர்வாயு தேவைப்பட்டது.


சிங்கப்பூரில் ஓமிக்ரான் அலை உச்சம் தொட்டு அது தணிந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று கூறியிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!