2020-2021ல் மணவிலக்குகள் 2% அதிகரிப்பு

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சூழ­லில் 2020 முதல் 2021 வரை மண­விலக்குகள் 2 விழுக்­காடு கூடி­ன. அதே­வே­ளை­யில், குடும்ப பரா­மரிப்பு மற்­றும் குடும்ப வன்­செ­யல் வழக்கு கள் குறைந்­தன.

குடும்ப நீதி­மன்­றங்­க­ளின் சுமை சென்ற ஆண்­டில் ஒட்­டு­மொத்­த­மாக 4 விழுக்­காடு கூடி­யது.

குடும்ப நீதி­மன்­றங்­க­ளின் பணித் திட்­டம் 2022 ஆய்­வ­ரங்கு நேற்று நடந்­தது. அதில் உரை­யாற்­றிய நீதி­பதி டெப்பி ஓங், இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

நீதி­மன்­றச் சேவை­களைப் பொது­மக்­கள் எளி­தா­கப் பெறு­வ­தற்­கான திட்­டங்­கள் பற்­றி­யும் அவர் குறிப்­பிட்­டார்.

மண­வி­லக்கு சென்ற ஆண்டு கூடி­னா­லும் 2019 ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் அவற்­றின் எண்­ணிக்கை குறை­வா­கவே இருந்­தது.

குடும்ப நீதி­மன்­றம் இந்த ஆண்டில் மூன்று முயற்­சி­க­ளைக் கைக்­கொள்­ளும் என்­றும் நீதி­பதி ஓங் குறிப்­பிட்­டார்.

குடும்ப நீதி­மன்­றத்­தின் திட்­டங்­கள் இதில் முத­லா­வது முயற்­சி­யாகும். நீதி­ப­தி­கள், நடு­வர்­கள், ஆலோ­ச­னை­யா­ளர்­கள் ஆகி­யோர் சேர்ந்து செயல்­பட்டு வழக்­கு­களுக்கு முழு­மை­யாக, விரை­வாக தீர்வு காண்­பது திட்­டங்­களில் அடங்­கும். சமூக சேவை­கள் ஒருங்­கிணைப்பைக் குடும்ப நீதி­மன்­றம் தொடர்ந்து பலப்­ப­டுத்­தும்.

தேவை­யுள்ள குடும்­பங்­கள், தங்­க­ளுக்­குப் பொருத்­த­மான சிறப்பு ஆத­ர­வுச் சேவை­களை எட்­டு­வதற்­கான வழி­மு­றை­க­ளை­யும் குடும்ப நீதி­மன்­றம் பலப்­ப­டுத்­தும்.

குடும்ப நீதி­மன்­றம் மக்­க­ளுக்கு நீதி கிடைக்­கும் வச­தி­களைச் சிறந்த முறை­யில் மேம்­ப­டுத்­தும் என்­பது இரண்­டா­வது முயற்சி.

இதில் தொழில்­நுட்­ப­மும் பயன்­படுத்­திக் கொள்­ளப்­படும். இப்­போதைய திட்ட அம்­சங்­களும் மறு­பரி­சீ­லனை செய்­யப்­படும்.

இந்த மேம்­பா­டு­கள் கார­ண­மாக மக்­க­ளுக்கு நீதி கிடைக்­கும் வசதி­கள் இரண்டு வழி­களில் மேம்­படும்.

நீதி­மன்ற நடை­மு­றை­கள் எளி­மை­யாக, தோழ­மை­மிக்­க­தாக ஆக்­கப்­படும். நீதி­மன்­றத்தை நாடு­வோர் போது­மான தக­வல்­களைத் தெரிந்து வைத்­து­கொண்டு சரி­யான முடிவுகளை எடுத்து சட்ட உரி­மை­களைப் பெறு­மாறு செய்­வது மற்றொரு வழி­யாக இருக்­கும் என்று அவர் கூறினார்

மூன்­றா­வது முயற்­சி­யாக சிங்­கப்­பூ­ரில் குடும்ப நடை­மு­றை­யின் ஆற்­ற­லை­யும் அள­வை­யும் குடும்ப நீதி­மன்­றம் தொடர்ந்து மேம்­ப­டுத்­தும். நீதித்­துறை பயிற்சிக் குழு ஒன்றை அமைத்து அது இதனை செய்­யும்.

புதிய குடும்ப நீதி­ப­தி­கள் சிறப்பு பயிற்­சி­யைப் பெறும் வகை­யில் ஒரு பாடத்­திட்­டத்தை இந்­தக் குழு ஒருங்­கி­ணைக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!