2021ல் சாதனை அளவாக காலிப் பணியிடங்கள்

சிங்கப்பூரின் பொருளியல் மீட்சி வேகமடைகிறது. இந்தச் சூழலில் சென்ற ஆண்டில் சாதனை அளவுக்கு காலிப் பணியிடங்கள் இருந்ததாக மனிதவள அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஊழியர் சந்தை இறுக்கமாக இருந்ததால் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஊழியர்களைப் பெறுவதற்கு முதலாளிகள் சென்ற ஆண்டு அதிக காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு டிசம்பரில் 114,000 காலிப் பணியிடங்கள் இருந்தன. இது, ஓராண்டுக்கு முன் இருந்ததைவிட இரண்டு மடங்குக்கும் மேலாகும்.

குறைந்தபட்சம் ஆறுமாத காலம் எடுத்துக் கொள்ளப்படாமலேயே இருந்த வேலைகள் அளவு சென்ற ஆண்டில் 35% ஆகக் கூடின. இது 2020ல் 27% ஆக இருந்தது.

பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஆகியோரைப் பார்க்கையில் இதே போக்கு காணப்பட்டது.

தகவல் தொடர்பு, நிதி, காப்புறுதிச்சேவை, நிபுணத்துவ சேவைகள், சமூக சேவைகள் ஆகிய வளரும் துறைகளில் ஏறத்தாழ பாதி பிஎம்இடி வேலைகளை நிரப்ப முடியவில்லை. இந்தத் துறைகளில் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் வேலை நியமனங்கள் சீராக அதிகரிக்கின்றன.

இத்தகைய ஊழியர்களுக்கான தேவை கூடி வருகிறது. இந்நிலையில், போதிய அளவுக்கு ஊழியர்கள் கிடைக்கவில்லை. தேவைப்படக்கூடிய சிறப்பு தேர்ச்சிகளோ வேலை அனுபவமோ ஊழியர்களிடம் இல்லை என்று முதலாளிகள் கூறுகிறார்கள்.

இதனிடையே, வரும் மாதங்களில் தொழிலாளர் பற்றாக்குறை கொஞ்சம் குறையும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.

எல்லைகள் திறக்கப்படுகின்றன. வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் பேர் வருவர். புதிய வேலைகளுக்கு பிஎம்இடி ஊழியர்களை ஆயத்தப்படுத்த பயிற்சி, வாழ்க்கைத்தொழில் செயல் திட்டங்களும் தீவிரப்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் கூறினார்.

வேலை நியமனம் அதிகரிக்கிறது. வேலையின்மை குறைகிறது. சாதனை அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.

இவை எல்லாம் கொவிட்-19 பாதிப்பில் இருந்து பொருளியல் மீட்சி அடைந்து வருகிறது என்பதற்குத் தெள்ளத்தெளிவான அறிகுறிகள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!