செய்திக்கொத்து

புற்றுநோய்: மேலும் அதிகமான நோயாளிகளுக்கு வீட்டில் சிகிச்சை

புற்றுநோய் உள்ளவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் திட்டம் 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 330 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தன் மருத்துவச் சேவைகளைச் சமூகத்திற்கு, குறிப்பாக மூத்தோருக்கு விரிவுபடுத்த, கொவிட்-19 கிருமித்தொற்று காலத்திற்கு முன்னதாகவே சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையம் (என்சிசிஎஸ்) திட்டமிட்டிருந்தது. கொள்ளைநோய் சூழல் ஏற்பட்டதும் இந்த வீட்டு பராமரிப்புத் திட்டத்தை மேலும் துரிதமாக நடைமுறைப்படுத்த முடிந்ததாக நிலையத்தைச் சேர்ந்த மூத்த ஆலோசகர் டாக்டர் இலேன் லிம் தெரிவித்தார்.

கிருமித்தொற்று அபாயம் கருதி இந்த வீட்டு சிகிச்சை முறையை இளம் நோயாளிகளும் நாடியதாக அவர் கூறினார். வீட்டிலேயே சிகிச்சை பெற முடிவதால், வரிசைகளில் காத்திருக்கத் தேவை இருக்காது என்றும் நோயாளியின் இல்லம் தேடி மருந்துகள் வருகின்றன என்றும் கூறப்பட்டது.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு 30 நாள் நீடிக்கும் தடுப்பூசி தகுதி

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளின் டிரேஸ்டுகெதர் செயலியில் அவர்களின் தடுப்பூசித் தகுதி 30 நாள்களுக்கு நீடிக்கும். கொவிட்-19க்கு எதிராக அவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதை அது குறிக்கும். இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், 30 நாள்களுக்கு மேல் சிங்கப்பூரில் இருப்போர், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான தங்களின் பதிவை, தேசிய தடுப்பூசிப் பதிவகத்தில் பதியவேண்டும். தடுப்பூசி தொடர்பில் சிங்கப்பூர் விதித்துள்ள நிபந்தனைக்கு உட்பட்டு அவர்கள் கூடுதல் தடுப்பூசிகள் போடும் தேவையும் ஏற்படலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இருப்பினும், 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய பயணிகளுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது. முன்னதாக, 'விடிஎல்' திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வந்த பயணிகளுக்கு 180 நாள்கள் நீடிக்கும் தற்காலிகத் தடுப்பூசித் தகுதி அவர்களின் டிரேஸ்டுகெதர் செயலியில் இடம்பெற்றது. இதற்கிடையே, கொவிட்-19 தடுப்பூசி அல்லது கூடுதல் தடுப்பூசியை சிங்கப்பூரில் போட்டுக்கொள்ள விரும்பும் பயணிகள், கட்டணம் செலுத்தி இம்மாத இடையிலிருந்து அவ்வாறு செய்யலாம் என்றது அமைச்சு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!