2022 முதல் காலாண்டில் 2.3% உயர்வு

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களின் மறு­விற்­பனை விலை, இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் 2.3 விழுக்­காடு உயர்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் அது 3.4 விழுக்­கா­டாக இருந்­தது. வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று வெளி­யிட்ட முன்­னோடி மதிப்­பீட்டு அறிக்­கை­யில் இந்­தத் தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

2020ஆம் ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டுக்­குப் பிறகு பதி­வான ஆகக் குறைந்த மறு­விற்­பனை வீட்டு விலை உயர்வு இது. இருப்­பி­னும் ஓராண்­டுக்கு முன்­பு­டன் ஒப்­பி­டும்­போது வீவக மறு­விற்­பனை வீட்டு விலை 12 விழுக்­காடு உயர்ந்­துள்­ளது.

விலை உயர்வு சற்றே தணிந்­தி­ருப்­பது எதிர்­பார்க்­கப்­பட்ட ஒன்­று­தான் என்­கி­றார்­கள் சொத்து முக­வர் நிறு­வ­னத்­தி­னர்.

தொடர்ந்து எட்டு காலாண்­டு­க­ளாக உயர்ந்­து­வந்த வீட்டு விலை, சென்ற காலாண்­டில் புதிய உச்­சத்­தைத் தொட்­டி­ருக்­கிறது. எனவே இனி விலை உயர்­வில் சற்றே மந்­த­நிலை ஏற்­ப­டக்­கூ­டும் என்று அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் ஒரு மில்­லி­யன் வெள்ளி மதிப்­பு­மிக்க 82 மறு­விற்­பனை வீடு­கள் கைமா­றி­ய­தாக ஆரஞ்­சுடீ அண்ட் டை நிறு­வ­னம் கூறி­யது. முந்­தைய காலாண்­டில் இத்­த­கைய 85 வீடு­கள் மறு­விற்­பனை ஆயின.

மறு­விற்­பனை வீட்டு விலை இந்த ஆண்­டி­லும் தொடர்ந்து உய­ரவே செய்­யும்; இருப்­பி­னும் சற்றே குறை­வாக ஐந்து முதல் எட்டு விழுக்­காட்டு உயர்வே எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது என்று அந்­நி­று­வ­னம் சொல்­லிற்று.

புதிய வீவக வீடு­கள் குறை­வா­கவே கட்­டி­மு­டிக்­கப்­ப­டு­கின்­றன. எனவே மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை தொடர்ந்து அதி­க­மா­கவே இருக்­கும் என்று கருத்­து­ரைத்­தது ஈஆர்ஏ ரியல்டி நெட்­ஒர்க் நிறு­வ­னம்.

மேலும் இந்த ஆண்டு கிட்­டத்­தட்ட 35,000 வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள் குறைந்­த­பட்­சம் குடி­யி­ருக்­க­வேண்­டிய வரம்பை பூர்த்தி­செய்­கின்­றன. அவை­யும் மறு­விற்­பனை சந்­தை­யில் விற்­ப­னைக்கு வரக்­கூ­டும்; கொஞ்­சம் புதி­தாக இருப்­ப­தால் அவற்­றின் விலை­யும் அதி­க­மா­கவே இருக்­கக்­கூ­டும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இந்த ஆண்டு முழு­மைக்­கு­மான மறு­விற்­பனை வீட்டு விலை உயர்வு மூன்று முதல் ஏழு விழுக்­கா­டாக இருக்­கும் என்று ஈஆர்ஏ நிறு­வ­னம் முன்­னு­ரைத்­தது.

இந்த ஆண்­டின் முதல் காலாண்­டுக்­கான இறுதி மறு­விற்­பனை விலைக் குறி­யீட்டை, வீவக இம்­மா­தம் 22ஆம் தேதி வெளி­யி­டும்.

இந்­நி­லை­யில், அடுத்த மாதம் தேவைக்­கேற்ப கட்­டப்­படும் 5,300 வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

புக்­கிட் மேரா, ஜூரோங் வெஸ்ட், குவீன்ஸ்­ட­வுன், தோ பாயோ, ஈசூன் போன்ற வட்­டா­ரங்­களில் அவை அமைந்­தி­ருக்­கும்.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட்­டில் 6,300 முதல் 6,800 தேவைக்­கேற்ப கட்­டப்­படும் வீடு­கள் விற்­ப­னைக்கு வரக்­கூ­டும் என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் கூறி­யது.

இவ்­வே­ளை­யில், சிங்­கப்­பூ­ரின் தனி­யார் வீட்டு விலை உயர்வு, இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் வெகு­வா­கக் குறைந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்ட சொத்­துச் சந்­தைத் தணிப்பு நட­வ­டிக்­கை­கள் இதற்­குக் கார­ணம்.

ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான கால­கட்­டத்­தில் தனி­யார் வீடு­க­ளின் விலை 0.4% மட்­டுமே உயர்ந்­துள்­ளது. 2020ஆம் ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டுக்­குப் பிறகு, காலாண்டு அடிப்­ப­டை­யில் பதி­வான ஆகக் குறை­வான விலை உயர்வு இது.

ஒப்­பி­டு­கை­யில், சென்ற ஆண்­டின் இறு­திக் காலாண்­டில் தனி­யார் வீடு­க­ளின் விலை ஐந்து விழுக்­காடு அதி­க­ரித்­தது. 2010ஆம் ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டுக்­குப் பிற­கான ஆக அதிக விலை உயர்வு அது.

இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் தரை­வீ­டு­க­ளின் விலை 4 விழுக்­காடு உயர்ந்­தது. தனி­யார் அடுக்­கு­மாடி வீடு­க­ளின் விலை 0.6% குறைந்­தது என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து எட்டுக் காலாண்டுகளாக உயர்ந்து வருகிறது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!