தேசிய சேவை உயிர்நாடியானது: மீண்டும் உணர்த்துகிறது காலம்

சுதந்­திர நாட்­டின் குடி­மக்­கள் தங்­கள் நாட்­டுக்­குப் பற்பல சேவை­களை ஆற்­று­கி­றார்­கள். நாட்டின் இறை­யாண்­மையை, நாட்­டின் ஆற்­றலை, உள்­கட்­டமைப்பை, வளங்­களை, மக்­க­ளைக் காக்க அவர்­கள் ஆற்­றும்­ தே­சிய சேவை அவற்­றில் உயி­ர்நா­டி­யா­னது.

சுதந்­திர நாடு ஒவ்­வொன்­றும் தன்­னைத்­தானே காத்­துக்கொள்­ளும் வகை­யில் போதி­ய­ அ­ள­வுக்குத் தற்­காப்­பைப் பெற்றிருக்க வேண்­டும்.

அத்­த­கைய பாது­காப்பு அரணின் நோக்­கம், மற்ற நாடுகளின் மீது ஆக்­கி­ர­மிப்பு செய்­வ­தாக இருக்­கக்­கூ­டாது; மாறாக, ஒரு நாட்­டின் மீது ராணுவ ரீதி­யில் ஆதிக்­கம் செலுத்­த­லாம், ஆக்­கி­ர­மிக்­க­லாம் என்று வேறு யாரா­வது எண்­ணம் கொள்­வார்­களே ஆனால் அவர்­கள் அதுபற்றி ஒரு முறைக்­குப் பல­முறை சிந்­தித்து கடை­சி­யில் அந்தக் கெட்ட எண்­ணத்­தைக் கைவிட வைக்­கும் அள­வுக்­குப் போதிய அரணை, தற்­காப்பு ஆற்­றலை, பாது­காப்பை அந்த நாடு கொண்டிருக்க வேண்­டும்.

ஒரு நாடு தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை வேறு யாரிடத்திலும் ஒப்படைக்க முடியாது. இதைத் தான் உக்­ரே­னிய ராணு­வம் இப்­போது மெய்ப்­பித்து வரு­கிறது. அந்த நாட்­டின் மீது படை­யெ­டுத்து அதை எளி­தாக ஆக்­கி­ர­மித்துவிட­லாம் என்ற எண்ணத்­து­டன்தான் ரஷ்யா உக்­ரேன் மீது சிறப்பு ராணுவ நட­வ­டிக்­கை­யை எடுத்­தது.

ஆனால் எதிர்­பார்த்­த­தைப்போல் சூழ்­நிலை இல்லை. உக்­ரே­னின் கடும் எதிர்ப்­பால் திண்­டாட வேண்டிய சூழ்­நிலை ரஷ்­யா­வுக்கு ஏற்­பட்டுள்ளது. ­ மற்­ற­வர்­க­ளைச் சார்ந்து இல்­லா­மல் எந்­த­வொரு நாடும் தன்­னைத் தற்­காத்­துக்கொள்ள எப்­போ­துமே அதன் ராணு­வத்தை ஆயத்­த­மாக வைத்­தி­ருக்க வேண்­டும். தி­ட­மான மன­உ­று­தி­யும் இதில் மிக முக்­கி­ய­மா­னது என்பதை உக்ரேனிய நிலவரம் உணர்த்துகிறது.

சிங்­கப்­பூர் காலனி நாடாக இருந்­த­போது, அதாவது 1954ஆம் ஆண்­டில் தேசி­யச் சேவை சட்­டம் ஒன்றை நடப்­புக்­குக் கொண்டு வர முடிவு செய்­தது. ஆனால் அதை அப்­போது பல­ரும் எதிர்த்­தார்­கள். கல­வ­ரம்­கூட நடந்­தது.

பிறகு சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் அடைந்­தது. அதை தொடர்ந்து 1967ஆம் ஆண்டு தேசி­ய சேவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. சிங்­கப்­பூர் மக்­கள் சுதந்­திரச் சூழ­லில் இந்த முடிவை வேறு வித­மா­கப் பார்த்­தார்­கள்.

தங்­கள் நாட்டை தாங்­கள்தான் பாது­காக்க, தற்­காக்க வேண்­டும்; சுதந்­திர நாட்­டின் இறை­யாண்­மைக்கு மிரட்டல் தலை எடுப்­ப­தைத் தடுக்க, தவிர்க்க வேண்டு­மா­னால் அந்த நாட்­டின் சொந்த குடி­மக்கள் தங்­கள் தாய­கத்­தைக் காக்­கும் மன உறு­தி­யு­டன், நன்கு பயிற்சி பெற்­ற­வர்­க­ளாக, எப்­போ­துமே ஆயத்த நிலை­யில் இருந்­து­வ­ர­வேண்­டும். இந்­தப் பொறுப்பு குடி­மக்­க­ளுக்­குத்­தான் என்­பதை உணர்ந்துகொண்­ட­தால் தேசிய சேவை உயிர்­நா­டி­யான ஒன்று என்­பதை சிங்­கப்­பூ­ரர்­கள் ஏற்­றுக்­கொண்­டார்­கள்.

இன்­றைய நிலை­யில், சிங்­கப்­பூரைத் தாக்­க­லாம் என்று முடிவு செய்­யும் யாருமே ஒரு­மு­றைக்கு இரு முறை சிந்­திக்க வேண்­டி­வ­ரும். நம்­பத்­தகுந்த பாது­காப்பு அர­ணாக, எதி­ரியை எச்­ச­ரித்து மிரட்­டும் வலு­வான ஒரு சக்­தி­யாக சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டைகள் தொடர்ந்து திகழ்வதே இதற்­கான கார­ணம்.

இப்­ப­டிப்­பட்ட ஆயு­தப்­ப­டையை உரு­வாக்கி, காலத்­திற்கு ஏற்ப அதை நவீ­னப்­ப­டுத்தி வலு­வாக்க மிக முக்­கி­ய­மான பல அம்­சங்­கள் கார­ணங்­க­ளாக இருக்கின்றன என்றாலும் அவற்­றில் உயிர்­நா­டி­யான ஒன்­றாக இருப்பது தேசிய சேவை.

தேசிய சேவை நாட்டு இளை­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளித்து நாட்­டைப் பாது­காக்க எப்­போ­துமே அவர்­களைத் தயார் நிலை­யில் வைத்திருந்து ஆயத்­தப்­படுத்­து­கிறது. தங்­கள் நாட்­டின் இறை­யாண்மைக்கு ஆபத்து வராது என்ற திட்­ட­வட்­ட­மான ஒரு நம்­பிக்கை இதன் மூலம் மக்­க­ளி­டையே ஏற்­ப­டு­கிறது.

இருந்தாலும் எந்த ஒரு நாடும் தன் எல்­லை­களை மட்­டும் பாது­காத்துக்கொண்­டால் போதாது என்­ப­தைச் சொல்­லித் தெரி­ய­வேண்­டியதில்லை.

ஒரு நாடு அதன் எல்­லைக்­குள் ஏற்­ப­டுத்­திக் கொண்டு இருக்­கக்­கூ­டிய சமூக, பொரு­ளி­யல் சாதனை­களும் பாது­காக்­கப்­பட வேண்­டும். சிங்கப் பூரைப் பொறுத்தவரை இந்­தக் கட­மை­யைச் செவ்­வனே நிறை­வேற்றுவதில் ஆய­தப்­ப­டை­க­ளுக்கு உறு­துணையாக உள்­துறைக் குழுக்­கள் உதவுகின்றன.

சட்­டம், ஒழுங்கு கெட்டு அதன் விளை­வாக சமூ­கத்­தில் பிரச்­சினை எது­வும் ஏற்­ப­ட­வில்லை; சமூ­கத்­தின் மீள்­தி­றனை மங்­கச் செய்­து­வி­டக்­கூடிய அள­வுக்கு குடி­மைப் பேரி­டர்­களோ வேறு விபத்து போன்ற சம்­ப­வங்­களோ இல்லை என்­பதை உள்­துறைக் குழுக்­கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

சிறிய நாடான சிங்­கப்­பூர் இறை­யாண்­மை­யு­டன் உயிர்பெற்று இருப்­ப­தற்கு, அது பாது­காக்­கப்­பட வேண்­டிய நாடாக இருப்­ப­தற்குத் தேசிய சேவை நிரந்­த­ர­மான தேவை­யாக இருக்­கிறது. இந்த இரண்டு இமா­லய சாத­னை­க­ளை­யும் சிங்­கப்­பூர் மிக நேர்த்தி ­யான முறை­யில் நிகழ்த்தி இருக்­கிறது.

தேசிய சேவைக்குத் தொண்­டாற்­றி­ய­வர்­கள், ஆயு­தப்­ப­டை­களில் சேவை­யாற்­றி­வர்­கள், உள்­து­றைக் குழுக்­களில் பல பணி­களை மேற்­கொண்டு உதவி­ய­வர்­கள், பெற்­றோர், குடும்­பத்­தி­னர், தேசிய சேவை பயிற்­சிக்கு உரிய நேரத்­தில் தங்­கள் ஊழி­யர்­களை விடு­வித்து-இதை சட்டரீதி­யான கடமை­யா­கக் கரு­தா­மல் நாட்டை பாது­காக்­கும் பொறுப்­பாக உணர்ந்து செயல்­பட்டு- அதன்­மூ­லம் உறு­துணை­யாக இருந்த முத­லா­ளி­கள் ஆகி­யோ­ரையே இதற்­கான பாராட்டு எல்­லாம் போய் சேரும்.

இதைக் கருத்­தில்­கொண்டு தேசிய சேவை 55 என்ற ஓராண்­டு­கால கொண்­டாட்­டம் சிங்­கப்­பூ­ரில் இப்­போது தொடங்கி இருக்­கிறது.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள், உள்­து­றைக் குழுவைச் சேர்ந்த ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட முந்­திய, இப்­போ­தைய தேசிய சேவை­யா­ளர்­கள் ஆற்றி இருக்­கும் தொண்­டு­களை அங்­கீ­க­ரித்­து பாராட்­டும் வகை­யில் இந்­தக் கொண்­டாட்­டத்­திற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருக்­கிறது.

இதன் ஒரு பகு­தி­யாக இப்­போ­தைய, முந்­திய ஆயத்­த­நிலை தேசிய சேவை­யா­ளர்­கள் தேசிய சேவை 55 அங்­கீ­கார அன்­ப­ளிப்பு ஒன்றைப் பெறு­வார்­கள். இது அவர்­க­ளுக்­குக் கிடைக்­கக்­கூ­டிய மிகப் பொருத்­த­மான வெகு­ம­தி­யாக இருக்­கும் என்பதில் ஐய­மில்லை. இதைவிட பெரும் வெகுமதி யாக, சிங்­கப்­பூர் ஒவ்வோர் ஆண்­டும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தன்­ சுதந்­திர தினத்­தைக் கொண்­டா­டும்­போது ஏற்படும் மகிழ்ச்சி, தேசிய சேவை­யால் ஏற்பட்ட ஒன்று என்பதை ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ரரும் மன­தில்­கொள்ள வேண்­டும்.

தேசிய சேவைக்­குத் தாங்­கள் கடன்­பட்­ட­வர்­கள் என்­பதை உணர்ந்து அதற்கு சிங்­கப்­பூ­ரர்­கள் உறு­து­ணை­யாக திக­ழ­வேண்­டும். இதுவே தேசிய சேவைக்குக் கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!