கரையோரப் பூந்தோட்டங்களில் புதிதாக பசுமைத் தோட்டம் இயற்கை விரும்பிகளுக்கும் குடும்பத்தினருக்கும் பற்பல வாய்ப்புகள்

கரை­யோ­ரப் பூந்தோட்டங்களில் (Gardens by the Bay) பகு­தி­யில் புதிதாக ஒரு பசுமை இடம் புதுக் கவர்ச்­சி­யாக இடம்­பெற்றுள்­ளது.

இயற்கை விரும்­பி­களும் குடும்­பத்­தி­ன­ரும் வெளிப்­பு­றத்­தில் மகிழ்ச்சி­யாக பொழு­தைக் கழிக்க, உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­பட, சொந்தமாக காய்­க­றி­க­ளைப் பயி­ரி­டு­வது பற்றி தெரிந்துகொள்ள இப்­போது அதிக வாய்ப்­பு­கள் அங்கு உள்ளன.

அந்­தப் புதிய பசுமை இடத்­திற்குச் 'சுறுசுறுப்­பான தோட்­டம்' என்று பெய­ரி­டப்­பட்டு உள்­ளது.

அது ஏறக்­கு­றைய 1.5 காற்­பந்து திடல் அள­வுக்­கு பரப்­பள­வைக் கொண்­டுள்­ளது.

சமூ­கத் தோட்­டம், பொழு­து­போக்­குக்­காக இரண்டு இடங்­கள், எல்லா வய­தி­ன­ரும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய உட­லு­று­திச் சாத­னம், இயற்கை தொடர்­பான பயி­ல­ரங்­கு­களை நடத்துவதற்­கான வகுப்­பறை, வளர்ப்­புப் பிரா­ணி­க­ளுக்கு ஏற்ற காப்­பிக்­கடை எல்­லாம் அங்கு உண்டு.

மரினா பேயை நோக்­கி­ய­படி இருக்­கும் நீர்­மு­கப்­புப் பகு­தி­யில் அந்த ஒரு ஹெக்­டர் பசுமை இடம் அமைந்­துள்­ளது.

பேஃபிரண்ட் எம்­ஆர்டி நிலை­யத்­தில் இருந்து 10 நிமி­டம் நடந்து அங்கு சென்­று­வி­ட­லாம்.

சுறு­சு­றுப்­பான தோட்­டத்­திற்கு நுழைவு இல­வ­சம். அது பந்­த­யப் பிடிப்­புக் கழ­கத்­தின் ஆத­ர­வு­டன் அமைக்­கப்­பட்டு இருக்­கிறது.

பேஃபிரண்ட் எம்­ஆர்டி நிலை­யத்­தை­யும் சுறு­சு­றுப்­பான தோட்­டத்­தை­யும் அந்­தப் பூந்தோட்டத்தின் பழமைப் பாது­காப்பு இடங்­க­ளை­யும் இணைக்கும் இடை­வ­ழிப் பேருந்துச் சேவை­யை­யும் மக்­கள் பயன்­ப­டுத்­திக்கொள்­ள­லாம். அங்­குள்ள சமூகத் தோட்­டத்­தில் 50க்கும் மேற்­பட்ட காய்­க­றி­கள், மூலிகைச் செடி­கள், பழச்செடி­கள் இருக்­கின்­றன.

அந்­தச் சமூ­கத் தோட்­டத்தை 20 தொண்­டூ­ழி­யர்­கள் பரா­ம­ரிக்­கிறார்­கள்.

கரை­யோ­ரப் பூந்தோட்டங்களின் 10வது ஆண்டு விழாவை ஒட்டி அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று அந்­தத் தோட்­டத்தை அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்­து­வைத்­தார்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீயும் அந்த நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்­டார்.

கரை­யோ­ரப் பூந்தோட்டங்களின் 10வது ஆண்டை நினை­வு­கூ­ரும் வகை­யில் பல புதிய அம்­சங்­கள் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன. அவற்­றில் இந்தச் சுறு­சு­றுப்­பான தோட்­டம் ஒன்று என்று திரு டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­தார்.

வலு­வான சமு­தாய, குடும்ப உறவு­க­ளைப் பலப்­ப­டுத்த உத­வும் புதிய இடங்­க­ளை­யும் செயல்­திட்­டங்­க­ளை­யும் கரை­யோ­ரப் பூந்தோட்டங்­களில் தொடர்ந்து உரு­வாக்க விரும்பு­வ­தா­க­வும் அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!