சமூக நிலையத்தின் பணி முக்கியம்: ஹெங்

சிங்­கப்­பூர் சமூ­கம் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பத்தை அதி­க­மாக கைக்­கொண்டு வரு­கிறது. அக்­கம்பக்­கத்­தி­னர் இணை­யத்­தில் உற­வா­டு­வது அதி­க­ரித்துள்ளது.

என்­றா­லும்­கூட குடி­மக்­க­ளுக்­கான மிக முக்கிய நேரடிச் சந்திப்பு நிலை­யங்­க­ளாக சமூக நிலையங்­கள் தொடர்ந்து சேவை­யாற்­றும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­தார்.

புதி­தாக மேம்­ப­டுத்­தப்­பட்ட ஃபெங்­ஷான் சமூக மன்­றத்தைத் திறந்­து­வைத்து உரை­யாற்­றிய திரு ஹெங், ஒவ்­வொரு குடி­யி­ருப்புப் பேட்­டை­யி­லும் அமைந்­துள்ள சமூக நிலை­யங்­கள் நாட்டு உரு­வாக்­கத்­தில் முக்­கிய பங்­காற்றி இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தொற்று காலத்­தின்­போது மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­கான முக்­கிய இடங்­க­ளாக சமூக நிலை­யங்­கள் இருந்­தன.

அங்­கி­ருந்­து­தான் மக்­கள் டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­யை­யும் கொரோனா கிருமி பரி­சோ­தனை கரு­வி­யை­யும் பெற்­றுக்­கொண்டனர் என்­பதைத் திரு ஹெங் சுட்­டிக்­காட்­டி­னார்.

தொற்­றுக்கு முன்பு சிலர் சமூக நிலை­யங்­களில் கால் வைத்­தது கூட கிடை­யாது.

ஆனால் தொற்­றுக்குப் பிறகு அவர்­கள் அந்த நிலை­யங்­களுக்குச் சென்று வந்­தி­ருப்­ப­தால் அவை தங்­க­ளுக்கு என்­னென்ன வச­தி­களைத் தர முடி­யும் என்­பது பற்றி ஆராய்ந்து தெரிந்­து­கொள்ள இப்­போது அவர்­கள் மிக ஆர்வமாக இருக்­கி­றார்­கள் என்று துணைப் பிர­த­மர் கூறி­னார்.

புதி­தாக மேம்­ப­டுத்­தப்­பட்ட ஃபெங்­ஷான் சமூக மன்­றத்­தில் பல புதிய வச­தி­கள் இருக்­கின்­றன. அவற்­றில் சமை­யல் அரங்கு ஒன்றும் அடங்­கும்.

சத்­தம் வெளியே கேட்­காத அள­வுக்கு வச­தி­க­ளு­டன் கூடிய நடன அரங்­கும் அங்கு உரு­வாக்­கப்­பட்டு இருக்­கிறது.

நான்­கா­வது மாடி ஒன்­றும் சேர்க்­கப்­பட்டு இருக்­கிறது. அங்கு பல ஆய்­வ­ரங்கு அறை­களும் இசைக்கூடங்­களும் இருக்­கின்­றன. அந்த அறை­களை எளி­தாக வேறு வேறு வடி­வில் மாற்றி அமைத்­துக்கொள்­ள­லாம். அங்­கி­ருக்­கும் அறை­க­லன்­கள் எல்­லாம் இடம்­விட்டு இடம் நகர்த்­தக் கூடி­யவை.

மாண­வர்­க­ளுக்­கான படிப்பு அறை­க­ளா­க­வும் அந்த இடத்தை மாற்­றிக்கொள்­ள­லாம்.

மூத்­தோர் உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­ட­லாம். இளை­யோர் நடன பயிற்­சி­களில் ஈடு­ப­ட­லாம்.

மின்­னி­லக்­கப் பயிற்சிப் படிப்பு­கள் பற்றிய வாழ்க்­கைத்தொழில் முன்­னேற்­றம் பற்­றிய உரை நிகழ்ச்சிகளை நடத்­த­லாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!