பிரதமர் லீ நம்பிக்கை: உறவில் நிலவும் சிரமமான பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் அமெரிக்காவும் சீனாவும் தீர்வு காணும்

அமெரிக்க, சீன உறவு சிரமமான பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். அந்த நாடுகள் தங்களுக்கு இடையில் நிலவும் வேறுபாடுகளை அமைதியான முறையில் சமாளிக்க வேண்டியது மிக முக்கியமானது என்றும் இதை அந்த நாடுகள் செய்ய இயலும் என்று தான் நம்புவதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கமான போக்கு நிலவினால் ஆசியப் பசிபிக் வட்டாரம் தொடர்ந்து செழிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

உக்ரேன் போர் அமெரிக்க, சீன உறவை பாதிக்கும் என்று கூறிய திரு லீ, இருந்தாலும் அந்த இரு நாடுகளில் எந்தவொரு நாடும் உக்ரேன் தொடர்பில் தங்கள் உறவு மோசமடைய விரும்பாது என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

அமெ­ரிக்­கா­வுக்கு ஒரு­வார கால பய­ணம் மேற்­கொண்டு இருந்த திரு லீ பயண முடி­வில் பேட்டி அளித்­தார்.

சிங்­கப்­பூர் தனது சுய தற்­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டும். இது முக்கியமானது என்­ப­தை உக்ரேன் நில­வரம் உறு­திப்­படுத்து­வ­தாக பிரதமர் லீ தெரிவித்தார்.

நாடு­க­ளுக்கு இடை­யில் ஒத்துழைப்பை­யும் சேர்ந்து செயல்­படும் நிலை­யை­யும் ஊக்­க­மூட்­டக்­கூ­டிய வட்­டார அமைப்­பு­கள் தேவைப்­படு­கின்றன என்­ப­தை­யும் உக்­ரேன் பிரச்­சினை எடுத்­துக்­கூ­று­வ­தாக அவர் கூறினார்.­

சிங்­கப்­பூர் தனது ராணுவ ஆற்றலை பலப்­ப­டுத்­து­வ­தோடு சிங்­கப்­பூ­ரர்­களும் தங்­கள் நாட்­டைத் தற்­காக்­கும் உறுதி­யு­டன் திகழ வேண்­டும் என்றார் அவர்.

அர­ச­தந்­திர முயற்­சி­க­ளைப் பொறுத்­த­வரை சிங்­கப்­பூர் ஆசிய பசி­பிக்­கில் கருத்­த­ரங்­கு­களை நடத்தி சிர­ம­மான பிரச்­சி­னை­களைப் பற்றி விவா­தித்து கை மீறிப்போவ­தற்கு முன்­பா­கவே அவற்றைத் தடுத்­து­வி­ட­லாம் என்­றாரவர்.

ஆசிய பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு அரங்­கம், கிழக்கு ஆசிய உச்­ச­நிலை சந்­திப்பு, அமெரிக்­கா­வின் இந்தோ பசி­பிக் பொரு­ளி­யல் அமைப்பு ஆகி­யவை இவற்­றில் உள்­ள­டங்­கும்.

இவை இந்த வட்­டார நாடு­களை ஒருங்கே கொணர்ந்து அவற்­றின் பிணைப்பை, ஒத்துழைப்பை, விரிவுபடுத்­துவ தாக பிரதமர் தெரி­வித்­தார்.

பிர­த­ம­ரின் அமெ­ரிக்­கப் பய­ணத்­தின்­போது ஆகாய ஒத்­து­ழைப்பு தொடர்­பான 'ஆர்­டி­மிஸ் உடன்­பாடு' கையெ­ழுத்தானது.

அமெ­ரிக்­கா­வுடன் கூடிய புதிய இணை­யப் பாது­காப்புக் கலந்­து­ரை­யா­டல் பற்றி அறி­விக்­கப்­பட்­டது. உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் துறையி­லும் இதர துறை­களிலும் ஒத்­து­ழைப்பை அதி­கப்­படுத்­து­வ­தற்­கான உடன்­பா­டு­கள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டன.

உக்­ரேன் போரைப் பற்­றியே அமெ­ரிக்க மக்­கள் அதி­கம் நினைக்­ கிறார்­கள் என்­றும் அமெரிக்க தலை­வர்­க­ளை தான் சந்­தித்த போதெல்­லாம் உக்­ரேன் போர் பற்­றிய விவாதம் இடம்­பெற்­ற­தாகவும் திரு லீ குறிப்­பிட்­டார்.

அதி­பர் பைடன், துைண அதிபர் கமலா ஹாரிஸ், அமைச்­சர்­கள், குடி­ய­ரசு, ஜன­நா­ய­கக் கட்­சி­க­ளைச் சேர்ந்த நாடா­ளு­மன்­றத் தலை­வர்­கள், தொழில்­துறை தலை­வர்­கள், ஐநா தலை­மைச் செய­லா­ளர் ஆகியோரை அமெ­ரிக்­கா­வில் பிர­தமர் லீ சந்­தித்­தார்.

திரு லீ நேற்று சிங்­கப்­பூ­ருக்­குப் புறப்­பட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!