சவால்களால் சிங்கப்பூர் வலுவடைந்துள்ளது

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கட்­டுப்­

பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ள­தால் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்­ற­போ­தி­லும் சுகா­தா­ரப்

பரா­ம­ரிப்­புத் துறை­யால் நிலை­மை­யைச் சமா­ளிக்க முடி­யும் என்று கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக் குழு தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19 கிருமி எங்கு, யாருக்­குப் பர­வும் என்று கணிக்க முடி­யா­த­தால் பொது­மக்­கள் தொடர்ந்து சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங்­கும் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங்­கும் வலி­யு­றுத்­தி­னர்.

"கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மீண்­டும் அதி­க­ரித்­தால் நமது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யால் நிலை­மை­யைச் சமா­ளிக்க முடி­யும். கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கும் அவ­சி­யம் ஏற்­ப­டாது. இதுவே எங்­க­ளது தற்­போ­தைய மதிப்­பீடு. ஆனால் சில சம­யங்­களில் திட்­ட­மிட்­ட­படி நடக்­காது என்று அனை­வ­ருக்­கும் தெரி­யும்.

"மிகச் சிறந்த திட்­டங்­கள், முன்­னு­ரைப்­பு­களை முன்­வைக்­க­லாம். இருப்­பி­னும், சில நேரங்­களில் பின்­ன­டை­வு­கள் ஏற்­ப­டக்­கூ­டும்," என்று அமைச்­சர் வோங் கூறி­னார்.

"கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டும்­போது சமூ­கப் பொறுப்­புக்­கான தேவை அதி­க­ரிக்­கிறது," என்று அமைச்­சர் ஓங் நினை­வூட்­டி­னார்.

எளி­தில் பாதிப்­ப­டை­யக்­

கூ­டி­ய­வர்­க­ளைச் சந்­திப்­ப­தற்கு முன்பு கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­வது, உடல்­ந­லம்

சரி­யில்லை என்­றால் தனி­மைப்­

ப­டுத்­திக்­கொள்­வது, தேவை ஏற்­பட்­டால் மட்­டுமே மருத்­து­வ­ம­னை­களில் உள்ள அவ­ச­ர­கால சிகிச்­சைப் பிரி­வுக்குச் செல்­வது ஆகி­யவை மிக­வும் முக்­கி­யம் என்­றார் அவர்.

இரு அமைச்­சர்­களும் நேற்று முன்­தி­னம் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் நான்கு மொழி நாளி­தழ்­க­ளான ஸ்டெர்ய்ட்ஸ் டைம்ஸ், சாவ்­பாவ், பெரித்தா ஹரி­யான், தமிழ் முரசு ஆகி­ய­வற்­றின் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்து இது­கு­றித்து பேசி­னர்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த அர­சாங்­கம் முடி­வெ­டுத்­த­தற்­கான கார­ணம் பற்றி அமைச்­சர்­கள் விளக்­க­ம­ளித்­த­னர்.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­படு வோர் எண்­ணிக்கை மீண்­டும் அதி­க­ரித்­தால் கடு­மை­யான

கட்­டுப்­பா­டு­கள் மறு­ப­டி­யும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டுமா போன்ற பல கேள்­வி­க­ளுக்கு அமைச்­சர்­கள் பதி­ல­ளித்­த­னர்.

கிரு­மித்­தொற்று பாதிப்பு மோச­ம­டைந்­தால் கடு­மை­யான கட்­டுப்

­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­வ­ரும் என்ற எண்­ண­மும் எதிர்­பார்ப்­பும் இருந்­தால் அர­சாங்­கம் முதற்­கொண்டு கட்­டுப்­பா­டு­

க­ளைத் தளர்த்­தி­யி­ருக்­காது என திரு ஓங் கூறி­னார்.

கொவிட்-19க்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் போரை உடற்­ப­யிற்­சிக் கூடத்­துக்­குச் சென்று பளுதூக்கும் பயிற்சியில் ஈடு­ப­டு­வ­து­டன் திரு ஓங் ஒப்­பிட்­டார். பளுதூக்கும் பயிற்சி­யில் ஈடு­ப­டும்­போது உடல் வலி ஏற்­ப­டு­வது இயல்பு.

ஆனால் நாள­டை­வில் உடல் வலு­வ­டை­யும். அதே போல 2020ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் கிரு­மிப் பர­வலை முறிய­டிக்­கும் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்பட்­ட­போ­தும் அதை­ய­டுத்து பல கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­ட­போ­தும் இயல்­பு­நிலை பாதிக்­கப்­பட்­டது. ஆனால் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டார் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­போது சிங்­கப்­பூ­ரர்­கள் வலு­வ­டைந்­த­னர்.

எல்­லை­கள் மீண்­டும் திறக்­கப்­

ப­டு­வ­தன் மூலம் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளால் சிங்­கப்­பூ­ருக்கு எளி­தில் வர­மு­டி­யும் என்­றும் அதன் விளை­வாக சில நிறு­வ­னங்­கள் எதிர்­நோக்­கும் ஊழி­யர் பற்­றாக்­கு­றைக்­குத் தீர்வு கிடைக்­கும் என்­றும் அமைச்­சர் வோங் கூறினார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு இருந்த கட்­டு­மான ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கையை இவ்­வாண்­டின் நடுப்­ப­கு­திக்­குள் எட்ட சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டி­ருப்­ப­தாக திரு வோங் தெரி­வித்­தார்.

எல்­லை­கள் திறக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் மலேசிய வர்த்தகர்களிடம் தங்கள் வாடிக்கையாளர்களை இழக்கக்கூடும் என்று உள்­ளூர் நிறு­வ­னங்­கள் கவ­லைப்­ப­டக்­கூ­டும் என்று கூறிய திரு வோங், சிங்­கப்­பூ­ருக்கு வரும் மலே­சி­யர்­கள், மற்ற நாடு­க­ளைச் சேர்ந்த சுற்­றுப்­ப­ய­ணி

­க­ளால் உள்­ளூர் நிறு­வ­னங்­களில் வர்த்­த­கம் மேம்­படும் சாத்­தி­யங்­கள் ஏரா­ள­மாக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

எல்­லை­க­ளைத் திறந்­து­வி­டு

வ­தன்­மூ­லம் சிங்­கப்­பூ­ரின் வாழ்க்­கைச் செல­வி­னம் அதி­க­ரிக்­குமா என்று செய்­தி­யா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

இதற்­குப் பதி­ல­ளித்த திரு வோங், வாழ்க்­கைச் செல­வி­னம் அதி­க­ரிப்­புக்கு உல­க­ளா­விய நிலை­யில் நடந்­து­வ­ரும் நிகழ்­வு­கள் முக்­கிய கார­ணம் என்று கூறி­னார்.

உக்­ரேன் போர், விநி­யோக இடையூறு ஆகி­ய­வற்றை அவர்

உதா­ர­ணம் காட்­டி­னார்.

"எல்­லை­கள் திறக்­க­ப்படு­வ­தால் தேவை­களும் அதி­க­ரிக்­கும். இத­னால் விலை­வா­சி­கள், வர்த்­த­கங்­க­ளின் செல­வி­னம் ஆகி­யவை

ஏற்­றம் காணக்­கூ­டும்.

"ஆனால், பின்­ன­டை­வு­கள்

மட்­டு­மல்­லாது நன்­மை­களும் ஏற்

­ப­டக்­கூ­டும்.

"ஒட்­டு­மொத்த அடிப்­ப­டை­யில் அது பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­துமா அல்­லது நன்­மை­களை அள்­ளிக் கொடுக்­குமா என்­பதை இப்­போதே கூறு­வது சிர­மம்.

"ஆனால் பண­வீக்­கத்­துக்கு அது முக்­கிய கார­ண­மாக இருக்­காது. விலை­வாசி அதி­க­ரிப்­புக்கு மற்ற நாடு­களில் நிகழ்­பவை கார­ண­மாக இருக்­கும்," என்று திரு வோங் கூறி­னார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ருக்­கு­மான வெவ்­வேறு நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் சேஃப்என்ட்­ரி­யின் அவ­சி­யம் குறித்­தும் அமைச்­சர்­க­ளி­டம் கேள்வி கேட்­கப்­பட்­டது.

வரு­ப­வர்­கள் தடுப்­பூசி

போட்­டுக்­கொண்­ட­வர்­களா என்று சில இடங்­களில் யாரும் பார்ப்­ப­தில்லை. இத­னால் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் செல்ல அனு­மதி இல்­லாத இடங்­களில் விதி­

மீ­றல்­கள் ஏற்­ப­ட­லாம்.

அவ்­வாறு நிக­ழும் சாத்­தி­யம் இருப்­ப­தை திரு ஓங் ஒப்­புக்­கொண்­டார். ஆனால் விதி­மு­றை­களை மீறு­ப­வர்­கள் மாட்­டிக்­கொள்­ளும்­போது அவர்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும். இந்த அப­ரா­தம் விதிக்­கும் முறை தொட­ரும் என்­றார் அமைச்­சர் ஓங்.

பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்­வ­தாக திரு வோங் பாராட்டினார்.

சிங்­கப்­பூ­ரில் இயல்பு வாழ்க்கை திரும்ப கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டா­லும் உல­க­ளா­விய நிலை­யில் கொவிட்-19 சூழல் மிக உன்­னிப்­பா­கக் கண்­கா­ணிக்­கப்­படும் என்று திரு வோங் உறுதி அளித்தார்.

மிக­வும் சிர­ம­மான முடி­வு­கள்

கடந்த ஈராண்­டு­களில் கொவிட்-19 சூழ­லைக் கட்­டுப்

படுத்த எடு­க்கப்­பட்ட முடி­வு­க­ளி­லேயே மிக­வும் சிர­ம­மான முடிவு என்­றால் பள்­ளி­களை மூடா­த­து­தான் என்­றார் அப்­போ­தைய கல்வி அமைச்­ச­ரான ஓங் யி காங்.

"இணை­ய­வழி பல்­லா­யி­ரக்­க­னக்­கான பெற்­றோர் பள்­ளி­களை மூட­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­ட­னர். ஆனால் நான் பார்த்த பெற்­றோரில் பெரும்­பா­லா­னோர்

பள்­ளி­களை மூட­வேண்­டாம் என்றும் அது மேலும் சிர­மத்தை ஏற்­ப­டுத்­தும் என்றும் என்­னி­டம் கூறி­னார்.

"பிள்­ளை­க­ளின் படிப்பு தடை­பட்­டு­வி­டும், அது மேலும் சிக்­கல்

­க­ளைக் கொடுக்­கும் என்று அவர்கள் கூறினர். அத­னால் பள்­ளி­களை மூடா­மல் இருந்­தது அப்­போது மிக­வும் சிர­மமான முடி­வாக இருந்­தது," என்­றார் திரு ஓங்.

சிங்­கப்­பூர் முழு­வ­தும் கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது மிக­வும் சிர­மமான ஒரு முடிவு என்­றார் அமைச்­சர் லாரன்ஸ்.

அதோடு இதற்கு முன்­னால் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­போ­வ­தாக அறி­வித்து பின் மீண்­டும் கட்­டுப்­பா­டு­களை நீட்­டித்­த­தும் தாம் எடுத்த சிர­ம­மான முடி­வு­களில் ஒன்று

என்­றார் அவர்.

செய்தி: தமிழவேல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!