‘இனவாதத்தை முக்கிய பிரச்சினையாகக் கருதும் மக்கள்’

சிங்­கப்­பூர் குடியிருப்பாளர்கள் பெரும்­பா­லோர், இனவாதத்தைக் காட்­டும் போக்கு இன்­றும் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக இருப்­ப­தா­கக் கரு­து­கின்­ற­னர் என்று அண்­மை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு கருத்­தாய்­வின் முடி­வு­கள் தெரி­வித்­துள்ளன. குறிப்­பாக அதி­கம் படித்த இளம் வய­தி­ன­ரி­டையே இந்­தக் கருத்து இருப்­ப­தாக அந்த ஆய்வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

இனவாதத்தைக் காட்­டும் போக்கு தொடர்ந்து முக்­கி­யப் பிரச்­சி­னை­யாக இருப்­ப­தா­கக் கருத்­தாய்­வில் பங்­கேற்­றோ­ரில் 56.2 விழுக்­காட்­டி­னர் கூறி­னர். இதே கருத்­தாய்வு 2016ஆம் ஆண்டு நடத்­தப்­பட்­ட­போது 46.3 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே இவ்­வாறு கூறி­னர்.

'சிஎன்ஏ'யும் கொள்கை ஆய்வுக் கழகமும் இணைந்து நடத்திய கருத்தாய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.

நவம்­பர் 2021க்கும் ஜன­வரி 2022க்கும் இடையே 21 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட 2,000 சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­பா­ளர்­கள் இந்த கருத்­தாய்­வில் பங்­கேற்­ற­னர். சிறு­பான்­மை­யி­னர் நன்கு பிர­தி­நி­திக்­கப்­ப­டு­வதை உறுதிசெய்­வ­தற்­காக, மலாய் மற்­றும் இந்­தி­யர்­க­ளின் தேசிய விகி­தாச்­சா­ரத்­தில் இரண்டு மடங்கு அதி­க­மானோர் கருத்தாய்­வில் உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

கடந்த ஐந்­தாண்­டு­களில் கூடு­தலான பங்­கேற்­பா­ளர்­கள் சீனர் அல்­லாத ஒரு­வர் பிர­த­ம­ரா­கவோ அதி­ப­ரா­கவோ பதவி வகிப்­பதை வர­வேற்­ப­தா­க­வும் கருத்­தாய்­வில் தெரி­ய­வந்­தது. சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த மலாய் இனத்­த­வர் ஒரு­வர் அதி­ப­ரா­கப் பதவி வகிப்­பதை 82.2 விழுக்­காடு பங்­கேற்­பா­ளர்­கள் வர­வேற்­கின்­ற­னர். 2016ஆம் ஆண்டு இந்த விகி­தம் 65.5 விழுக்­கா­டாக இருந்­தது.

82 விழுக்­காடு பங்­கேற்­பா­ளர்­கள், சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த இந்­தி­யர் ஒரு­வர் அதி­ப­ரா­கப் பதவி வகிப்­பதை வர­வேற்­கின்­ற­னர். 2016ஆம் ஆண்டு இந்த விகி­தம் 70.6 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

சிங்­கப்­பூ­ரின் நில­வ­ரம் பெரும்­பான்மை இனத்­த­வ­ருக்­குச் சாத­க­மாக இருப்­ப­தாக 53.9 விழுக்­காட்டு பங்­கேற்­பா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

எனி­னும், வேலை­யி­டங்­களில் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த சீன, மலாய், இந்­திய இனத்­த­வர் சக ஊழி­யர்­களாக இருப்­ப­தைப் பொது­வாக பங்­கேற்­பா­ளர்­கள் விரும்புவது கருத்தாய்வில் தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!