ஆபத்துள்ள அழகான விளையாட்டு

குதி­ரை­யேற்­றம் என்­பது சாதா­ர­ண­மான ஒரு நட­வ­டிக்கை அல்ல. அதில் சில ஆபத்­து­களும் அடங்­கி­யுள்­ளன.

விபத்­தில் சிக்கி இறந்­தோர், பக்­க­வாதத்­தால் நிரந்­த­ர­மா­கப் பாதிக்­கப்­பட்­டோர் என குதி­ரை­யேற்­றத்­தால் சில­ருக்­குப் பெரும் சோத­னை­கள் வந்­த­துண்டு. ஆனால், தன் விருப்­பத்­துக்கு எது­வும் தடை­யாக இருந்­த­தில்லை என்­கி­றார் 17 வயது ப்ரீத்தி பிர­காஷ்.

கிட்­டத்­தட்ட ஐந்து ஆண்­டு­க­ளாக தேசிய குதி­ரை­யேற்ற மன்­றத்­தில் வார­மொரு முறை பயிற்சி மேற்­கொண்டு வரு­கி­றார் ப்ரீத்தி.

குதி­ரை­க­ளு­டன் நெருங்­கிப் பழ­கும் வாய்ப்­பினை இது அவ­ருக்கு அளித்­துள்­ளது.

ஒரு சம­யம், தான் அமர்ந்திருந்த குதிரை ஒன்று மிரண்­டு­விட்­டது. அத­னால், கம்பி வேலி­களின் மீது ப்ரீத்தி தூக்­கி­யெ­றி­யப்­பட்­டார். பலத்த காயங்­கள் இன்றி அவர் உயிர்­தப்­பி­ய­போ­தும் அச்­சம்­ப­வம் தன்­னைச் சற்று பாதித்­த­தாகப் பகிர்ந்­து­கொண்­டார்.

"காயங்­களும் ஆபத்­து­களும் என்­னைத் தடுப்­ப­தில்லை. அன்­பான மிரு­கங்­க­ளான குதி­ரை­களு­டன் நேரம் செல­வ­ழிப்­பது மன உளைச்­ச­லைப் போக்­கு­கிறது. ஒவ்­வொரு வார­மும் நான் அதி­கம் எதிர்­பார்த்து காத்­தி­ருப்­பது, என் பயிற்­சிக்­கா­கத்­தான்," என்­றார் ஆங்­கிலோ சீனத் தன்­னாட்­சிப் பள்­ளி­யில் ஆறாம் ஆண்டு பயிலும் ப்ரீத்தி.

எந்­நே­ர­மும் முன்­னெச்­ச­ரிக்கை இன்றி அச்­ச­ம­டை­யும் சுபா­வம் கொண்­டவை குதி­ரை­கள். எனவே, குதி­ரை­யேற்­றத்­தின்­போது குதி­ரை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­து­தான் பெரும் சவால் என்று அவர் கூறி­னார்.

ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் இடம்­பெ­றும் 'ட்ரெ­சாஜ்' என்ற ஒரு­வகை குதி­ரைச் சவாரி வித்­தையை ஈடு­பாட்­டு­டன் மேற்­கொண்டு வரு­கி­றார் ப்ரீத்தி. இது தொடர்­பான போட்­டி­களில் கலந்து­கொண்டு விரு­து­களும் வென்­றுள்­ளார். எதிர்­கா­லத்­தில் கால்­நடை மருத்­து­வ­ரா­கும் லட்­சி­யம் கொண்­டுள்­ளார் ப்ரீத்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!