அனைத்து எம்.பி.க்களும் ஒரே அரங்கில் அமர்ந்திருந்தனர்

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் (எம்.பி.க்கள்) நேற்­றைய நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தின்­போது தாங்­கள் அமர்­வதற்­கான ஒரு புதிய ஏற்­பாட்­டைப் பார்த்­த­னர். அவர்­கள் இரு பிரி­வு­களா­கப் பிரிக்­கப்­பட்­ட­னர்.

கொவிட்-19 பெருந்­தொற்று தொடங்­கிய காலத்­தி­லி­ருந்து பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் கார­ண­மாக எம்.பி.க்­கள் நாடா­ளு­மன்­றத்­தி­ன் பிர­தான அரங்­கில் ஓர் இருக்கை விட்டு அமர வைக்­கப்­பட்­டார்­கள்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்­கிய 14வது நாடா­ளு­மன்­றக் கூட்­டத் தொடர் தொடங்­கி­ய­தி­லி­ருந்து இப்­போ­து­தான் அரு­க­ருகே அமர்ந்­தி­ருந்­தார்­கள்.

நேற்­றைய அமர்­வின் தொடக்­கத்­தில் பேசிய நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின், "கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் சிங்­கப்­பூர் ஒரு மைல்­கல்லை எட்­டி­யுள்ள நிலை­யில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக தங்­கள் கட­மை­களை நிறை­வேற்­று­வ­தில் நெருக்­க­டியை எதிர்­கொண்­டா­லும் ஆழ்ந்த கடப்­பா­டு­டன் எம்.பி.க்கள் செயல்­பட முடி­யும்.

"கிரு­மித்­தொற்று நமது செயல்­பாட்­டின் வேகத்­தைக் குறைக்­க­வில்லை. மாறாக, நாம் அனை­வ­ரும் நமக்­குள்ள நாடா­ளு­மன்ற கட­மை­களைச் சிறப்­பா­கக் கையாண்­டோம்," என்று தெரி­வித்­தார்.

பேச்­சா­ளர் கூடத்­தில் உள்ள இருக்­கை­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்த எம்.பி.களுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­கள் கிரு­மித்­தொற்­றுக்கு இது­வரை ஆளா­கா­மல் இருக்க வேண்­டும். அவர்­கள் உரை­யாற்­று­வ­தற்கு தனிப்­பட்ட உரை­மே­டை­யும் ஒலி­வாங்­கி­யும் வழங்­கப்­படும் என்­றும் திரு டான் விளக்­கி­னார்.

பொதுப் பார்வையாளர் கூடம் இப்­போது நாடா­ளு­மன்ற அமர்­வு­களை நேரடியாக நாடாளுமன் றத்துக்கே வந்து காண விரும்­பும் பொது­மக்­க­ளுக்­காக மீண்­டும் திறக்­கப்­படும் என்­றும் நாடாளுமன்ற நாயகர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!