செய்திக்கொத்து

கத்தியைப் பயன்படுத்தும் குற்றங்கள் ஆண்டுக்கு சுமார் 150 நிகழ்கின்றன

கொலை, கொள்ளை, கலவரம், கடுமையான காயங்களை ஏற்படுத்தும் செயல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கத்தி தொடர்பான குற்றங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கையில் அது நிலையாக உள்ளது. அண்மைய ஆண்டு களில் அது ஆண்டுக்கு சராசரியாக 150 குற்றச்செயல் களாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இதுவே ஆண்டு சராசரியாக உள்ளது என்று நேற்று நாடாளு மன்றத்தில் உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் தெரிவித்தார்.

இந்த குற்றங்களில் 36% குடியிருப்புப் பகுதிகளிலும், 3% கல்வி வளாகங்களிலும் நடந்தன. மற்ற சம்பவங்கள் பொது மற்றும் வர்த்தக இடங்களில் நிகழ்ந்தன. ஆபத்தான ஆயுதங்கள் உள்ளிட்ட அவசரச் சம்பவங்கள் தொடர்பில், அழைப்பு வந்த 15 நிமிடங்களுக்குள் காவல்துறை சம்பவ இடங்களுக்குச் செல்ல முடிந்தது என்று திரு டான் கூறினார்.

இதுபோன்ற குற்றங்கள் அண்மைய காலத்தில் அனை வர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவற்றில் குறிப்பிடத் தக்கது மார்ச் 14ஆம் தேதி நடந்தது. அதில் 37 வயது ஆடவர், புவாங்கோக் ஸ்குவேர் கடைத்தொகுதிக்கு அருகே நீண்ட வாளுடன் சுற்றித் திரிந்ததைக் காணொளியில் காண முடிந்தது. அவர் தனது ஆயுதத்தை ஒரு பாதசாரி மீது சுழற்றிக்கொண்டிருந்தார், அதற்குள் மற்ற பொதுமக்கள் முன் வந்து, காவல்துறையினர் வந்து அவரைக் கைது செய்யும்வரை அவரைக் கட்டுப்படுத்தினர்.

மார்ச் 23ஆம் தேதி நடந்த சம்பவத்தில் 64 வயது ஆடவர் கத்தியுடன் காவல்துறை அதிகாரியை நெருங்கிய போது, தனது பாதுகாப்பு கருதி அதிகாரி அவரைச் சுட்டார். அந்த ஆடவர் பின்னர் மருத்துவமனையில் மாண்டார்.

"ஒரு நபர், காவல்துறையின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க மறுத்தால், அதிகாரிகள் உட்பட அவரைச் சுற்றி யுள்ளவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், காவல்துறை தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தலாம். காவல்துறை அதிகாரிகள் தேவையான இடங்களில் தங்கள் பலத்தைப் பயன்படுத்துவார்கள். மேலும் இது அவர்களின் சொந்த உயிர் உட்பட மற்ற உயிர்களைப் பாதுகாக்கவும் காப்பாற்றவும் ஒரு குற்றத்தைத் தடுக்கவும் குற்றவாளி களைக் கைது செய்தலையும் உள்ளடக்கியது," என்றும் அமைச்சர் விளக்கினார்.

சட்டப் பிரிவு 377A பற்றி வெவ்வேறு பிரிவுகளுடன் அரசாங்கம் பேசும்

ஆண்களுக்கிடையிலான பாலுறவைக் குற்றமாக்கும் சட்டம் தொடர்பாக சிங்கப்பூரில் பலதரப்பட்ட பிரிவினரின் கருத்துகளை நன்கு புரிந்துகொள்ள அரசாங்கம் ஆலோ சனை நடத்தி வருவதாகவும், தொடர்ந்து பேசும் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று தெரி வித்தார். சிங்கப்பூருக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அது தீர்மானிக்கும்போது, பல்வேறு கருத்துகளைக் கவன மாகப் பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றவியல் தண்டனைச் சட்ட பிரிவு 377A தொடர்ந்து இருக்கும் என்றும் ஆனால் அது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் மீது வழக்குத் தொடர பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இது இந்தச் சட்டம் மாற்றப்பட வேண்டுமா அல்லது ரத்து செய்யப்பட வேண்டுமா என்ற விவாதத்தை மீண்டும் தூண்டியது.

திரு சண்முகம் உட்பட பல அமைச்சர்கள் இந்த விவகாரம் பற்றி பேசினர். திருமணம் மற்றும் குடும்பம் குறித்த சமூக அணுகுமுறைகள் காலப்போக்கில் மாறி விட்டன என்று குறிப்பிட்ட அவர், சிங்கப்பூர் "பாரம்பரிய பாலின குடும்ப பண்புநெறிகளைக் கொண்ட நிலையான சமூகத்தை நிலைநிறுத்தும் அதேவேளையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் இடமளிக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழவும், சமூகத்திற்குப் பங்களிக்கவும் வாய்ப்பளிக்கும்," என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் வலியுறுத்தினார்.

நேற்று இதை மீண்டும் வலியுறுத்திய திரு சண்முகம், 2007ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதிலிருந்து, "ஓரினச்சேர்க்கை குறித்த சமூக அணுகுமுறை படிப்படியாக மாறிவிட்டது," என்றார். இந்த விவகாரத்தில் தற்போது இரண்டு முக்கியக் கண்ணோட் டங்களும் பல துணைக் கண்ணோட்டங்களும் இருப்பதாக அவர் கூறினார்.

"ஒருபுறம், பெரும்பான்மையான சிங்கப்பூரர்கள் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலின திருமணம் நமது சமூகத்தின் அடித்தளமாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். மறுபுறம், பாரம்பரிய குடும்ப அமைப்பில் நம்பிக்கை கொண்டவர்கள் உட்பட பல சிங்கப்பூரர்கள், ஆண்களுக்கிடையேயான தனிப்பட்ட இருதரப்பு சம்மத்துடன் கூடிய பாலுறவு குற்றமாக்கப்படக் கூடாது என்று கருது கின்றனர். நாங்கள் பல்வேறு கண்ணோட்டங்களைக் கவன மாகப் பரிசீலிப்போம். மேலும் வெவ்வேறு கண்ணோட்டங் களைச் சமநிலைப்படுத்த முயற்சிக்கும் சிறந்த வழியை மதிப்பிடுவோம்," என்றார் அமைச்சர் சண்முகம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!