‘புதிய கடப்பிதழுக்கு ஒரு மாதம் காத்திருக்க நேரும்’

புதி­தா­கக் கடப்­பி­த­ழுக்கு விண்­ணப்­பிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் குறைந்­த­பட்­சம் ஒரு­மாத காலம் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று குடி­நுழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

மிக அதி­க­மான விண்­ணப்­பங்­கள் வந்­து­சேர்­வ­தால் அவற்­றைப் பரி­சீ­லிக்க ஒரு மாத கால­மா­வது ஆகும் என்­பதை ஆணை­யம் அதன் இணை­யத்­த­ளத்­தில் நேற்று குறிப்­பிட்­டி­ருந்­தது.

சென்ற மாதத் தொடக்­கத்­தில், கடப்­பி­த­ழுக்­குத் தகு­தி­பெ­றும் விண்­ணப்­பங்­கள் ஒரு வாரத்­தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு புதிய கடப்­பி­தழ்­கள் வழங்­கப்­பட்­டன. விண்­ணப்­பங்­கள் அதி­க­மா­ன­போது கூடு­தல் நேரம் தேவைப்­பட்­டது என்­பதை ஆணை­யம் சுட்­டி­யது.

முன்­ன­தாக, மார்ச் மாதத்­தில் முன்­னெப்­போ­தும் இல்­லாத வகை­யில் புதிய கடப்­பி­த­ழுக்கு மிக அதி­க­மான விண்­ணப்­பங்­கள் வந்து குவிந்­த­தாக ஆணை­யம் சென்ற வாரம் தக­வல் வெளி­யிட்­டி­ருந்­தது. கிட்­டத்­தட்ட ஒரு மில்­லி­யன் கடப்­பி­தழ்­கள் காலா­வ­தி­யா­கி­விட்­டன அல்­லது விரை­வில் காலா­வ­தி­யா­க­வி­ருக்­கின்­றன என்­ப­து­டன் எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டி­ருப்­ப­தும் இதற்­குக் கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

அன்­றா­டம் ஏறக்­கு­றைய ஆறா­யி­ரம் புதிய விண்­ணப்­பங்­கள் வந்­து­சேர்­வ­தா­கக் குறிப்­பிட்ட குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம், கொவிட்-19க்கு முன்பு சரா­ச­ரி­யாக ஈரா­யி­ரம் பேர் விண்­ணப்­பித்­த­தா­கக் கூறி­யது.

அடுத்த சில மாதங்­களில் வெளி­நாடு செல்­லத் திட்­ட­மி­டு­வோர், கடப்­பி­த­ழைப் புதுப்­பிக்க வேண்­டி­யி­ருந்­தால் முன்­கூட்­டியே விண்­ணப்­பிக்­கும்­படி அது அறி­வு­றுத்­தி­யது. 70 வெள்ளி கட்­ட­ணம் செலுத்தி இணை­யம் வழி­யா­க­வும் விண்­ணப்­பிக்­க­லாம்.

கடப்­பி­தழ் தயா­ரா­ன­வு­டன் விண்­ணப்­ப­தா­ர­ருக்­குத் தக­வல் அளிக்­கப்­படும். பின்­னர் அவர்­கள் நிய­மிக்­கப்­பட்ட 27 அஞ்­சல் நிலை­யங்­களில் கூடு­தல் கட்­ட­ணம் ஏதும் செலுத்­தா­மல் கடப்­பி­த­ழைப் பெற்­றுக்­கொள்ள இய­லும்.

காத்­தி­ருக்­கும் நேரம் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கா­த­தால், சென்ற மாத இறு­தி­யில் விண்­ணப்­பித்த பல­ரும் தங்­கள் பய­ணத் திட்­டங்­களை மாற்றி அமைத்­து­வ­ரு­வ­தா­கக் கூறி­னர்.

இந்­நி­லை­யில், அடுத்த ஆறு மாதங்­களில் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும் திட்­டம் இல்­லா­தோர் இப்­போதே புதிய கடப்­பி­த­ழுக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும் என்று கட்­டா­யம் ஏது­மில்லை என்­பதை ஆணை­யம் நினை­வு­றுத்­தி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!