மாசடைந்த எரிபொருள் விநியோகிக்கப்பட்டதா என்று விசாரணை

சிங்­கப்­பூ­ரில் கப்­பல்­க­ளுக்கு எரி­பொ­ருள் நிரப்­பும் இரண்டு விநி­யோக நிறு­வ­னங்­கள் மாச­டைந்த எரி­பொ­ருளை 34 கப்­பல்­க­ளுக்கு நிரப்­பி­ய­தா­கக் கூறப்­ப­டு­வது குறித்து கடல்­துறை, துறை­முக ஆணை­யம் விசா­ரித்­து­வ­ரு­கிறது.

பிப்­ர­வரி, மார்ச் மாதங்­களில் இவ்­வாறு நடந்­த­தா­கக் கூறப்­ப­டு­வ­தாக, எரி­பொ­ரு­ளைச் சோதிக்­கும் 'வெரிட்­டாஸ் பெட்­ரோ­லி­யம் சர்­வி­சஸ்' (விபி­எஸ்) நிறு­வ­னம், மார்ச் 31ஆம் தேதி தெரி­வித்­தி­ருந்­தது.

இத­னால் ஏறக்­கு­றைய 50 விழுக்­காட்­டுக் கப்­பல்­க­ளின் எரி­பொ­ருள் கட்­ட­மைப்பு பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் அது கூறி­யி­ருந்­தது.

உல­கின் ஆகப் பெரிய கப்­பல் எரி­பொ­ருள் நிரப்­பும் நடு­வ­மாக விளங்­கும் சிங்­கப்­பூ­ரில் தர­மான எரி­பொ­ருள் நிரப்­பப்­ப­ட­வேண்­டும் என்ற விதி­யைக் கடு­மை­யா­கக் கரு­து­வ­தா­கக் கூறிய ஆணை­யம், எரி­பொ­ருள் மாச­டைந்­த­தற்­கான கார­ணம் குறித்து விசா­ரணை நடை­பெ­று­வ­தா­கக் குறிப்­பிட்­டது.

தக­வல் கிடைத்­த­வு­டனே உட­ன­டி­யாக எரி­பொ­ருள் விநி­யோ­கத்தை நிறுத்­தும்­படி சம்­மந்­தப்­பட்ட நிறு­வ­னத்­துக்கு உத்­த­ர­விட்­ட­து­டன் அந்த எரி­பொ­ருளை நிரப்­பிக்­கொண்ட அனைத்­துக் கப்­பல்­க­ளுக்­கும் அதைப் பயன்­ப­டுத்­து­வது குறித்து எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும்­படி தக­வல் அனுப்­ப­வும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யம் தெரி­வித்­தது.

ஆணை­யமோ, விபி­எஸ் நிறு­வ­னமோ மாச­டைந்த எரி­பொ­ருளை விநி­யோ­கித்த நிறு­வ­னங்­க­ளின் பெயர்­களை வெளி­யி­ட­வில்லை.

விதி­மீ­றல் கண்­ட­றி­யப்­பட்­டால் உரிய நட­வ­டிக்கை எடுக்க ஆணை­யம் ஒரு­போ­தும் தயங்­காது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

மாச­டைந்த எரி­பொ­ரு­ளால் கப்­ப­லின் இயந்­தி­ரம் சேத­ம­டை­யக்­கூ­டும்.

கப்­பல் மோச­மா­கப் பழு­த­டை­யும் வாய்ப்­பும் உண்டு. நடுக்­க­ட­லில் இயந்­தி­ரம் செய­லி­ழந்­தால் கப்­பல் எதன்­மீ­தா­வது மோதவோ தரை­தட்­டவோ நேரி­டும்.

ஓர் ஆண்­டில் சரா­ச­ரி­யாக 130,000 கப்­பல்­கள் சிங்­கப்­பூர் துறை­மு­கத்­திற்கு வந்­து­செல்­கின்­றன.

அவற்­றில் ஏறத்­தாழ 40,000 கப்பல்­கள் இங்கு வரும்போது எரி­பொ­ருள் நிரப்­பிக்­கொள்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!