அவசர சிகிச்சைப் பிரிவுக்கும் பிரசவப் பிரிவுக்கும் இடையேயான இடமாற்றங்களை மேம்படுத்த என்யுஎச் நடவடிக்கை

தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனை (என்­யு­எச்) அதன் அவ­சர சிகிச்­சைப் பிரி­வுக்­கும் பிர­ச­வப் பிரி­வுக்­கும் இடை­யே­யான இட­மாற்­றங்­க­ளின் ஒருங்­கி­ணைப்பை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

36 வார கர்ப்­பி­ணிப் பெண் அதன் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் இரண்டு மணி­நே­ரம் காத்­தி­ருந்த சம்­ப­வத்­தைத் தொடர்ந்து, சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் பேசி­னார்.

சுகா­தார அமைச்­சு­ட­னும் சிங்­கப்­பூ­ரின் மருத்­துவ சேவை­கள் இயக்­கு­ந­ரு­டன் கலந்­தா­லோ­சித்து என்­யு­எச் இந்த விவ­கா­ரத்தை முழு­மை­யாக ஆராய்ந்து அதன் செயல்­மு­றை­களை மதிப்­பாய்வு செய்­த­தாக டாக்­டர் ஜனில் கூறி­னார்.

"அதன் மருத்­துவ கவ­னிப்பு செயல்­மு­றை­கள் பொருத்­த­மா­னவை. ஆனால் மேம்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­தொ­டர்­பு­கள் மற்­றும் அவ­சர சிகிச்­சைப் பிரி­வுக்­கும் பிர­ச­வப் பிரி­வுக்­கும் இடையே பரி­மாற்­றங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பை மேம்­ப­டுத்­தும் சில பகு­தி­கள் இருந்­தன. என்­யு­எச் இந்த மேம்­பா­டு­களை செயல்­ப­டுத்­தி­யுள்­ளது," என்று அவர் விளக்­கி­னார்.

இரண்டு மணி­நே­ரம் அந்த பெண் கவ­னிக்­கப்­ப­டா­மல் விடப்­ப­ட­வில்லை என்­றும் அவர் வந்­த­தி­லி­ருந்து அவ­சர சிகிச்­சைப் பிரிவு குழு­வின் கவ­ன­மும் கவ­னிப்­பும் அவ­ருக்­குக் கிடைத்­த­தா­க­வும் அந்த தம்­ப­தி­கள் அதை ஃபேஸ்­புக்­கில் ஒப்­புக்­கொண்­ட­தா­க­வும் டாக்­டர் ஜனில் கூறி­னார்.

"கர்ப்­பத்­தின் சோக­மான விளைவு மருத்­து­வ­ம­னை­யில் அவ­ருக்கு ஏற்­பட்ட அனு­ப­வத்­தின் விளை­வாக ஏற்­ப­ட­வில்லை என்­றும் அவர்­கள் மேலும் குறிப்­பிட்­ட­னர்," என்று அமைச்­சர் மேலும் கூறி­னார்.

ரக­சி­யக் காப்பு கார­ணங்­க­ளுக்­கா­க­வும் அந்­தத் தம்­ப­தி­யி­னர் தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­கா­க­வும் வழக்­கின் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­பட மாட்­டாது என்­றார் டாக்­டர் ஜனில்.

மார்ச் 23ஆம் தேதி அன்று ஓர் அறிக்­கை­யில், என்­யு­எச் தலைமை நிர்­வாகி அய்­மெ­ரிக் லிம் இந்த சம்­ப­வத்­திற்கு மன்­னிப்பு கேட்­டார். மேலும் அந்த பெண்­ணுக்கு நெருக்­க­மான கண்­கா­ணிப்­பை­யும் கவ­னிப்­பை­யும் வழங்க மருத்­து­வ­மனை இன்­னும் அதி­க­மாக செய்­தி­ருக்க வேண்­டும் என்­பதை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

அந்­தத் தம்­ப­தி­ய­ருக்கு உறு­தி­ய­ளிக்­கும் தக­வலை எவ்­வாறு வழங்­கி­யது என்­ப­தைப் பார்த்த பிறகு, அவ்­வாறு செய்­யும் முறையை மேம்­ப­டுத்­தி­யி­ருக்­க­லாம் என்­பதை என்­யு­எச் உணர்ந்­த­தா­க­வும் டாக்­டர் ஜனில் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!