பொருள்களை முதலில் வாங்கி பிறகு பணம் செலுத்தும் முறை; 2021ல் $440 மி. பரிவர்த்தனை

சிங்­கப்­பூ­ரில் அண்­மைக் கால­மா­கப் பொருள்­களை முத­லில் வாங்கி அவற்­றுக்­கான பணத்­தைப் பிறகு செலுத்­தும் முறை பிர­ப­ல­ம­டைந்து வரு­கிறது. கடந்த ஆண்­டில் இந்த அணு­கு­மு­றை­யின்­கீழ் $440 மில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள பரி­வர்த்­த­னை­கள் செய்­யப்­பட்­டன.

இருப்­பி­னும் மொத்த பரி­வர்த்­த­னை­களில் இது ஒரு சிறு பகுதிதான் என்று வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் நேற்று தெரி­வித்­தார்.

பொருள்­க­ளுக்­கான பணத்தை தவணை முறை­யில் செலுத்த வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வாய்ப்பு தரும் இத்­த­கைய பரி­வர்த்­த­னை­கள், $103 பில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள கடன் அட்டை, பற்று அட்டை பரி­வ­ர்த்­

த­னை­களில் 0.5 விழுக்­காட்­டுக்­கும் குறைவு என்று நாடா­ளு­மன்­றத்­தில் திரு டான் கூறி­னார்.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­திற்­குத் தலைமை தாங்­கும் அமைச்­ச­ரான திரு தர்­மன் சண்­மு­க­ரத்­தி­னத்­தின் சார்­பாக தெம்­ப­னிஸ் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு டெஸ்­மண்ட் சூ கேட்ட கேள்­விக்கு திரு டான் பதி­ல­ளித்­தார்.

இளை­யர்­களை வெகு­வாக ஈர்க்­கும் துணி­ம­ணி­கள், ஆப­ர­ணங்­கள் போன்­ற­வற்றை விற்­கும் பல நிறு­வ­னங்­கள் முத­லில் வாங்கி பிறகு பணம் செலுத்­தும் முறை­யைக் கடைப்­பி­டிப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் சிங்­கப்­பூ­ரில் வழங்­கப்­படும் இத்­த­கைய அணு­கு­மு­றை­யால் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கடன் சுமை ஏற்­படும் அபா­யம் அவ்­வ­ள­வாக இல்லை என்­றார் திரு டான்.

தவ­ணை­முறை பணம் செலுத்­து­வ­தற்­கான காலக்­கெ­டுவை வாடிக்­கை­யா­ளர்­கள் கடந்­து­விட்­டால் அவர்­கள் அடுத்­த­டுத்து வேறு பரி­வர்த்­த­னை­க­ளுக்­குத் தவ­ணை­மு­றை­யில் பணம் செலுத்­து­வ­தற்கு பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள் அனு­ம­திக்­கா­ததை திரு டான் சுட்­டி­னார்.

வாடிக்­கை­யா­ளர்­கள் காலக்­கெ­டு­வுக்­குள் தவ­ணை­மு­றை­யில் பணம் செலுத்­தா­மல்­போ­னால் அதற்கு வட்டி வசூ­லிக்­கப்­ப­டு­வ­தில்லை. இத­னால் கடன் அதி­க­ரிக்­கும் அபா­யம் குறைவு என்­றார் திரு டான்.

இத்­த­கைய பணம் செலுத்­தும் முறையை நெறிப்­ப­டுத்த அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளதா என்று கேட்­கப்­பட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளித்த திரு டான், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் கடன் சுமை ஏற்­படும் அபா­யங்­க­ளைத் தவிர்க்க இத்­து­றைக்­கான வழி­காட்டி நெறி­மு­றை­க­ளின் மூலம் சுய கட்­டுப்­பாடு மேற்­கொள்­ளப்­ப­டு­வது போது­மா­னது என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் மதிப்­பீடு செய்­துள்­ள­தாக திரு டான் கூறி­னார்.

பொருளை முத­லில் வாங்கி பிறகு பணத்­தைச் செலுத்­தும் அணு­கு­முறை சில நாடு­களில் மிகப் பிர­ப­ல­மாக உள்­ளது. அந்த நாடு­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அனு­ப­வங்­களை ஆணை­யம் ஆராய்ந்து வரு­வ­தாக திரு டான் கூறி­னார்.

ஆணை­யத்­தின் வழி­காட்­ட­லின்­கீழ் இத்­த­கைய அணு­கு­மு­றை­யைக் கடைப்­பி­டிக்­கும் அனைத்து நிறு­வ­னங்­க­ளுக்­கு­மான வழி­காட்டி நெறி­மு­றையை உரு­வாக்க பணிக் குழு ஒன்றை சிங்­கப்­பூர் ஃபின்டெக் சங்­கம் அமைத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!