சிங்கப்பூருக்குள் நுழைய தேவையான ஆவணங்கள்; தெளிவுப்படுத்திய ஐசிஏ

சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய தேவை­யான ஆவ­ணங்­கள் பற்றி குடி­

நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் தெளி­வு­ப்ப­டுத்­தி­யுள்­ளது.

வாட்ஸ்­அப் தளத்­தில் வலம் வரும் தக­வ­லுக்­குப் பதில­ளிக்­கும் வகை­யில் இந்த விவ­ரங்­களை ஆணை­யம் வெளி­யிட்­டுள்­ளது.

நில­வ­ழிச் சோத­னைச் சாவடி வழி­யாக சிங்­கப்­பூ­ருக்கு வந்த பயணி ஒரு­வ­ரின் அனு­ப­வத்­தைப் பற்றி தெரி­விப்­ப­தாக அந்த வாட்ஸ்­அப் தக­வல் குறிப்­பிட்­டது.

குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யத்­தின் கட்­ட­மைப்­புக்­கும் சுகா­தார அமைச்­சின் கட்­ட­மைப்­புக்­கும் இடையே எவ்­வித தொடர்­பும் இல்லை என்­றும் அத­னால் அசௌ­க­ரி­யம் ஏற்­பட்­ட­தா­க­வும் அத்­த­க­வல் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் திரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் நீண்­ட­கால குடி­நு­ழைவு அட்டை வைத்­தி­ருப்­போர் ஆகி­யோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளாக இருந்­தால் தடுப்­பூசி சான்­றி­த­ழைச் சமர்ப்­பிக்­கத் தேவை­யில்லை என்று ஆணை­யம் கூறி­யது.

இவர்­கள் எஸ்ஜி வருகை அட்­டையை சமர்ப்­பித்­தால் போதும் என்­றும் சுகா­தார அமைச்­சின் கட்­ட­மைப்­பி­லி­ருந்து அவர்­க­ளது தடுப்­பூசி தர­வு­கள் பெற்­றுக்­கொள்­ளப்­படும் என்றும் ஆணை­யம் தெரி­வித்­தது. சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், வெளி­நாட்­டி­னர் ஆகி­யோர் வெளி­நா­டு­களில் தடுப்­பூசி போட்­டி­ருந்­தா­லும் தடுப்­பூசி சான்­றி­த­ழைச் சமர்ப்­பிக்­கத் தேவை­யில்லை. மின்­னி­லக்க தடுப்­பூசி சான்­றி­தழை எஸ்ஜி வருகை அட்­டை­யு­டன் அவர்­கள் பதி­வேற்­றம் செய்­தி­ருந்­தால் போது­மா­னது என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு அதி­லி­ருந்து குண­ம­டைந்­த­வர்­கள் நில­வ­ழிச் சோத­னைச்­சா­வ­டி­கள் வழி­­யா­கப் பய­ணம் செய்­யும்­போது அதற்­கான ஆதா­ரத்­தைச் சமர்ப்­பிக்­கத் தேவை­யில்­லை­தே­வை­யான அனைத்து ஆவ­ணங்­க­ளை­யும் தயா­ராக வைத்­துக்­கொண்டு சோத­னைச்­சா­வ­டி­க­ளுக்கு வந்து மூன்று நாள்­க­ளுக்­குள் தங்­கள் எஸ்ஜி அட்­டை­யைச் சமர்ப்­பிக்­கும்­படி பய­ணி­கள் ஆணை­யம் கேட்­டுக்­கொண்­டது. பய­ணம் தொடர்­பான நம்­ப­க­ர­மான தக­வல்­க­ளைப் பெற ஆணை­யத்­தின் அதி­கா­ர­பூர்வ இணை­யப்­பக்­கத்­துக்­குச் செல்­லும்­படி பய­ணி­கள் கேட்­டுக்கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!