ஃபெரோரோ நிறுவனத்தின் கிண்டர் சர்ப்ரைஸ் முட்டைகள் சிங்கப்பூரில் திரும்பப் பெறப்படவில்லை

இத்­தா­லி­யைச் சேர்ந்த சாக்­லெட் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ஃபெரெரோ, அதன் 'கிண்­டர் சர்ப்­ரைஸ் முட்­டை­கள்' சிங்­கப்­பூ­ரில் திரும்­பப் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்று உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிறு­வர்­க­ளி­டையே மிக­வும் பிர­ப­ல­மான 'கிண்­டர் சர்ப்­ரைஸ் முட்­டை­யில்', சாக்­லெட்­டி­னால் செய்­யப்­பட்ட முட்டை ஓடு போன்ற அமைப்­பிற்­குள் சிறிய பொம்மை ஒன்று இருக்­கும். சிறு­வர்­கள் அதைச் சேக­ரித்து மகிழ்­வர்.

இந்­நி­லை­யில், 'கிண்­டர் சர்ப்­ரைஸ்' முட்­டை­கள் திரும்­பப் பெறப்­ப­டு­வது குறித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பேசிய ஃபெரெரோ நிறு­வ­னப் பேச்­சா­ளர், பெல்­ஜி­யத்­தில் தயா­ரிக்­கப்­பட்ட சில பொருள்­கள் இவ்­வாறு திரும்­பப் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

'சல்­மோ­னெல்லா' நச்­சுக் கிருமி கலந்­தி­ருக்­க­லாம் என்று அஞ்­சப்­ப­டு­வ­தால், பிரிட்­ட­னில் இத்­த­கைய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. 'சல்­மோ­னெல்லா' நச்­சுக் கிரு­மி­யால் வாந்தி, வயிற்­றுப்­போக்கு, வயிற்று வலி, காய்ச்­சல் உள்­ளிட்­டவை ஏற்­ப­ட­லாம்.

'சல்­மோ­னெல்லா' நச்­சுக் கிருமி பாதிப்பு குறித்து, மேலும் சில நாடு­க­ளின் உண­வுப் பாது­காப்பு அமைப்­பு­க­ளு­ட­னும் ஃபெரெரோ நிறு­வ­னம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கிறது. நிறு­வ­னத்­தின் 'கிண்­டர்' தயா­ரிப்­பு­கள் எதி­லும் கலந்­தி­ருப்­ப­தாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை; வாடிக்­கை­யா­ளர்­கள் யாரும் புகா­ர­ளிக்­க­வும் இல்லை; இருப்­பி­னும் வாடிக்­கை­யா­ளர் நல­னுக்கு முன்­னு­ரிமை தரு­வ­தால், நிறு­வ­னம் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக அதன் தயா­ரிப்­பு­க­ளைத் திரும்­பப் பெறு­வ­தா­கப் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

20 கிராம் எடை­யில் மூன்று 'கிண்­டர் சர்ப்­ரைஸ்' முட்­டை­கள் கொண்ட பொட்­ட­லங்­கள் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது.

அவற்­றில் காலா­வ­தி­யா­கும் தேதி ஜூலை 11, 2022 முதல் அக்­டோ­பர் 7, 2022 வரை குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இதை உறு­திப்­ப­டுத்த ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் சிங்­கப்­பூர் உணவு அமைப்­பைத் தொடர்பு கொண்­டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!