பிப்ரவரி மாதத்தில் சில்லறை விற்பனை 3.4% குறைந்தது

சிங்­கப்­பூ­ரின் பிப்­ர­வரி மாதத்­துக்­கான சில்­லறை விற்­பனை அதற்கு முந்­தைய மாதங்­க­ளை­வி­டக் குறைந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புள்­ளி­வி­வ­ரத் துறை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் இந்­தத் தக­வல் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த ஆண்டு சீனப் புத்­தாண்டு பிப்­ர­வரி 1,2ஆம் தேதி­களில் கொண்­டா­டப்­பட்­டது. இதை முன்­னிட்டு வாடிக்­கை­யா­ளர்­கள் ஜன­வ­ரி­யி­லேயே பொருள்­களை வாங்­கி­விட்­ட­தால் பிப்­ர­வரி மாத சில்­லறை விற்­பனை குறைந்­தி­ருக்­க­லாம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

ஆண்டு அடிப்­ப­டை­யில், சென்ற பிப்­ர­வரி மாத சில்­லறை விற்­பனை 3.4% குறைந்­தது. ஒப்புநோக்க ஜன­வரி மாதம் அது 12% அதி­க­ரித்­தி­ருந்­தது.

உணவு, மது­பா­னத் துறை­களில் ஆக அதி­க­மாக விற்­பனை 16.5% வீழ்ச்­சி­கண்­டது. சிற்­றங்­கா­டி­க­ளி­லும் சிறிய கடை­க­ளி­லும் 14.1% விற்­பனை சரிந்­தது.

மோட்­டார் வாகன விற்­ப­னை­யும் 14.1% குறைந்­தது. பேரங்­கா­டி­களில் அது 10.8%ஆகப் பதி­வா­னது.

இருப்­பி­னும் ஒப்­ப­னைப் பொருள்­கள், மருந்­துப் பொருள்­கள் போன்­ற­வற்­றின் சில்­லறை விற்­பனை 21 விழுக்­காடு உயர்ந்­தது.

பெட்­ரோல் விற்­பனை, கைக்­கடி­கா­ரங்­கள், நகை­கள், அறை­க­லன்­கள், வீட்டு உப­யோ­கப் பொருள்­கள், கணினி, தொலைத்­தொ­டர்­புச் சாத­னங்­கள் போன்­ற­வற்­றின் விற்­பனை அதி­க­ரித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

உணவு, பானத் துறை­யில் பிப்­ர­வரி மாதச் சில்­லறை விற்­பனை 734 மில்­லி­யன் வெள்­ளி­யாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த ஆண்டு பிப்­ர­வ­ரிக்­கான ஒட்­டு­மொத்த சில்­லறை விற்­ப­னை­யின் மதிப்பு 3.2 பில்­லி­யன் வெள்ளி என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பிப்­ர­வரி மாத சில்­லறை விற்­ப­னை­யில் 13.6% இணை­யம்­வழி மேற்­கொள்­ளப்­பட்­டது. ஜன­வ­ரி­யில் அது 12.4% ஆகப் பதி­வா­னது.

சென்ற ஆண்­டின் முதல் இரண்டு மாதங்­க­ளு­டன் ஒப்­பிட்­டால், இந்த ஆண்டு ஜன­வரி, பிப்­ர­வ­ரிக்­கான மொத்த சில்­லறை விற்­பனை 4.9% கூடி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!