கரிம வெளியேற்றத்தை குறைக்க முழு முயற்சி

சிங்­கப்­பூர், கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைப்­ப­தற்­காக பல்­வேறு முயற்­சி­களை எடுத்து வரு­வ­தாக பரு­வ­நிலை மாற்­றம் தொடர்­பான விவ­கா­ரங்­களில் பேச்சு நடத்தும் ஜோசஃப் டியோ தெரி­வித்­துள்­ளார்.

அணு­சக்­தியை இங்கு பயன் ­ப­டுத்­தும் சாத்­தி­யம் குறித்து ஆராய்­வ­தும் ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து தூய்­மைான எரி­சக்­தியை இறக்­கு­மதி செய்­வ­தும் கரி­மக் கழி­வைக் குறைப்­ப­தற்­காக சிங்­கப்­பூர் எடுத்­து­வ­ரும் நட­வ­டிக்­கை­களில் சில என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

"நாங்­கள் அனைத்து சாத்­தி­யங்­க­ளை­யும் ஆராய்ந்து வரு­கி­றோம்," என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கத்­தின் தெம்­புசு கல்­லூரி ஏற்­பாடு செய்த பரு­வ­நிலை மாற்­றம் குறித்த கலந்­து­ரை­யா­ட­லில் திரு டியோ தெரி­வித்­தார்.

இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின் நெறி­யா­ள­ராக பொதுத் தூதர் டாமி கோ செயல்­பட்­டார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கத்­தில் பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு இயற்கை சார்ந்த தீர்­வு­கள் வழங்­கும் பிரி­வின் தலை­வர் அறி­வி­ய­லா­ளர் கோ லியன் பின், சிங்­கப்­பூர் இயக்­கு­நர்­கள் சங்­கத்­தின் தலை­வர் வோங் சு-யென் உள்­ளிட்ட பலர் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர்.

"ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வரை குழாய்­களை அமைப்­பது திட்­டங்­களில் ஒன்று. அதன் மூலம் ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து தூய்­மை­யான எரி­பொ­ருளை இறக்கு­ மதி செய்­வது நோக்­கம்," என்று திரு டியோ மேலும் தெரி­வித்­தார்.

"அது ஒரு மாபெ­ரும் திட்­டம். எல்­லை­க­ளைக் கடந்து குழாய் அமைக்­கப்­ப­டு­கிறது. அதே சம­யத்­தில் இந்த ஒன்றில்தான் எரி­பொ­ருள் தேவைக்காக நம்­பி­யி­ருக்க வேண்­டுமா," என்­ப­தை­யெல்­லாம் ஆராய வேண்­டி­யுள்­ளது." என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சன் கேபிள் நிறு­வ­னத்­தின் 30 பில்­லி­யன் ஆஸ்­தி­ரே­லிய டாலர் மதிப்­புள்ள ஆஸ்­தி­ரே­லியா-ஆசியா எரி­சக்தி இணைப்­புத் திட்­டம், சிங்­கப்­பூைர கடல் வழி­யாக 4,200 கிலோ மீட்­டர் கேபிள் மூலம் டார்­வி­னில் உள்ள 'சன் கேபிள்' நிறு­வ­னத்­து­டன் இணைக்­கிறது. இந்­தத் திட்­டத்­தின் கட்­டு­மா­னப் பணி 2023ஆம் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து 2026ஆம் ஆண்­டில் டார்­வி­னி­லும் 2027ல் சிங்­கப்­பூ­ரி­லும் எரி­சக்தி விநி­யோ­கம் தொடங்­கும். 2027ஆம் ஆண்­டில் எரி­சக்தி விநி­யோ­கம் முழு அள­வில் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் தற்­போது தனது எரி­சக்தி தேவைக்கு இயற்கை எரி­வா­யு­வையே நம்­பி­யி­ருக்­கிறது.

ஆனால் பூமி வெப்­ப­ம­டை­வ­தற்கு கார­ண­மான கரிம வெளி­யேற்றத்தை முற்­றி­லும் குறைப்­பது சிங்­கப்­பூ­ரின் நீண்­ட­கால இலக்­காக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!