ஜூரோங்கில் மாபெரும் உணவு நிலையம்

சிங்­கப்­பூர், அதன் உள்­ளூர் தேவையை பூர்த்தி செய்­வ­தற்­காக உணவு உற்­பத்­தியை பெருக்­கும் முயற்­சி­யில் முழு­மூச்­சு­டன் ஈடு­பட்டு வரு­கிறது.

இந்த நிலை­யில் மாபெ­ரும் உணவு நிலை­யத்­துக்கு நேற்று அடிக்­கல் நாட்­டப்­பட்­டுள்­ளது.

விமான நிலை­யங்­களில் பல்­வேறு சேவை­களை வழங்கி வரும் 'சேட்ஸ்' நிறு­வ­னம், சுமார் 150 மில்­லி­யன் வெள்ளி செல­வில் அந்தப் புதிய உணவு நிலை­யத்­தைக் கட்டு­ கிறது. உணவு உற்­பத்­தி­யில் சுய­சார்பு நிலையை அடை­யும் முயற்­சி­யாக ஜூரோங் புத்­தாக்க வட்­டா­ரத்­தில் புதிய நிலை­யம் உரு­வா­கும்.

இவ்­வட்­டா­ரத்­தில் இடம்பெறும் முதல் உணவு நிறு­வ­னம் சேட்ஸ் ஆகும்.

சிங்­கப்­பூ­ரின் பரந்த உணவு உற்­பத்தி சூழ­லின் ஒரு பகு­தி­யா­க விளங்கும் அந்த நிலை­யத்தில் ஆய்­வுக்­க­ழ­கங்­கள், வேளாண் உணவு தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள், வர்த்­தக சங்­கங்­கள் உள்­ளிட்ட பல அமைப்­பு­கள் இடம்­பெற்று இருக்­கும்.

புதிய உணவு நிலை­யத்­துக்­கான நில அகழ்வு நிகழ்ச்­சி­யில் பேசிய வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், தொழில்­நுட்­பம் மற்­றும் புத்­தாக்­கத்­தில் உள்ள தற்­போ­தைய முன்­னேற்­றங்­கள் உணவு உற்­பத்தி முறை­யையே மாற்­றி­ய­மைக்­கிறது என்­றார்.

வரும் 2030ஆம் ஆண்­டில் உணவு உற்­பத்­தி­யில் 30 விழுக்­காட்டை அடைய வேண்­டும் என்­பது சிங்­கப்­பூ­ரின் இலக்­கா­கும்.

இந்த இலக்கை அடைய, புதிய உணவு நிலை­யம் பேரு­த­வி­யாக இருக்­கும்.

சிறிய நாடான சிங்­கப்­பூ­ரின் உள்­ளூர் வளங்­கள் வரம்­புக்­குட்­பட்டு இருப்பதால் உண­வுப் பாது­காப்­புக்­கும் மீள்­தி­ற­னுக்­கும் எப்­போ­தும் முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கிறது என்­றார் அமைச்சர்.

பரு­வ­நிலை மாற்­றம், வரம்­புக்­குட்­பட்ட விநி­யோ­கச் சங்­கிலி, அண்­மைய கொவிட்-19 கொள்­ளை­நோய் மற்­றும் உக்­ரே­னியப் போர் போன்ற உல­க­ளா­விய சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டிய சம­யத்­தில் நமது முன்­னு­ரிமை முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது என்­று அமைச்­சர் கான் குறிப்பிட்டார்.

ஆசி­யா­வின் முன்­னணி உணவு மற்­றும் ஊட்­டச்­சத்து நிலை­ய­மாக சிங்­கப்­பூர் உரு­வாக வேண்­டும் என்­றும் அவர் தெரிவித்­தார்.

சேட்ஸ் நிறு­வ­னத்­தின் புதிய உணவு நிலை­யம் 2024ஆம் ஆண்டு­வாக்­கில் கட்டி முடிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அது, ஐந்து மாடி­க­ளைக் கொண்ட வளா­க­மாக இருக்­கும்.

உணவு உற்­பத்தி செய்­வ­தற்­கான வச­தி­கள், சமை­யல் கூடங்­கள், புத்­தாக்க தொழில்­நுட்­ப வசதிகளுடன் சோத­னைக் கூடங்கள், சரக்­குக்­கி­டங்கு, தள­வாட நிலை­யம் போன்ற வற்றை அக்கட்டடம் உள்ளடக்கி யிருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!