சிங்கப்பூருக்குள் அத்துமீறி நுழைய முயன்ற கார் ஓட்டுநர்; மூவர் கைது

துவாஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்கு அத்துமீறி வர முயன்ற கார் ஓட்டுநர் ஒருவர், தானியக்க மோட்டார்சைக்கிள் குடிநுழைவு முகப்புகளுக்கு இடையில் தமது காரை மோதினார்.

சிங்கப்பூரரான அந்த ஆடவரும் அவருடைய காரில் இருந்த இரு பயணிகளும் கைது செய்யப்பட்டனர். சீன நாட்டு ஆடவரும் வியட்னாமிய மாதும் அவ்விரு பயணிகள். அந்த ஓட்டுநரிடம் திருத்தி அமைக்கப்பட்ட சிங்கப்பூர் கடப்பிதழ் இருந்தது.

மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனம் ஒன்றை ஓட்டிய அந்த ஆடவர், இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) அதிகாலை 2.14 மணிக்கு மலேசிய சோதனைச்சாவடியில் குடிநுழைவு நடைமுறையை நிறைவேற்றத் தவறினார். துவாஸ் சோதனைச்சாவடியை நோக்கி காரை வேகமாக ஓட்டி வந்த அவரை மலேசிய போக்குவரத்து காவல்துறையினர் பின்தொடர்ந்தனர்.

துவாஸ் சோதனைச்சாவடி நுழைவாயிலில் இருந்த துணைக் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த கார் வருவதைக் கவனித்தார். அவர் உடனடியாக எச்சரிக்கை மணியை எழுப்பினார். சோதனைச்சாவடி முடக்கப்பட்டது.

தானியக்க மோட்டார்சைக்கிள் தடங்கள் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய அந்த ஓட்டுநர் முற்பட்டார். எனினும், தடங்கள் ஒடுக்கமாக இருந்ததால் முகப்புகள் மீது அந்த கார் மோதியது. அங்கிருந்த அதிகாரி ஒருவரின் கணுக்காலில் சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் அந்த ஆடவரைத் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த இரு பயணிகளும் தப்பியோட முயன்றனர். ஆனால், அவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்த அந்த வியட்னாமிய மாதுக்குக் காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அந்த அதிகாரியும் அந்த மாதும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த கார் ஓட்டுநரை காவல்துறையும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் தேடி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த ஆடவரின் சிறுநீரில் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில், அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் தெரியிவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!