‘விஇபி’க்கு 7 வாரக் காத்திருப்பு

வெளி­நா­டு­களில் பதி­வு­செய்­யப்­பட்ட வாக­னங்­களில் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய விரும்­பும் வாக­ன­மோட்­டி­கள் 'விஇபி' எனும் வாகன நுழைவு அனு­ம­தி­யைப் பெற ஏறத்­தாழ ஏழு வாரம் காத்­தி­ருக்க வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி வாகன நுழைவு அனு­மதி கோரும் 76,000 விண்­ணப்­பங்­கள் வந்து குவிந்­தி­ருப்­ப­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

2020 மார்ச்­சில் எல்­லை­கள் மூடப்­ப­டு­வ­தற்கு முன்­பு­டன் ஒப்­பி­டு­கை­யில், சரா­ச­ரி­யாக ஒரு வாரத்­தில் பெறப்­பட்ட விண்­ணப்­பங்­க­ளை­விட இது ஆறு மடங்­குக்­கும் அதி­கம்.

இவ்­வே­ளை­யில், பொழு­து­போக்­குக்­காக வரும் பய­ணி­கள் தங்­கள் பய­ணத் திட்­டங்­களைத் தள்­ளிப்­போ­டும்­படி ஆணை­யம் ஆலோ­சனை கூறி­யுள்­ளது.

வேலைக்­கா­கவோ குடும்­பத்­தி­ன­ரு­டன் மீண்­டும் ஒன்­று­கூ­டவோ விண்­ணப்­பிப்­போர் இத­னால் பல­ன­டை­வர் என்­பதை அது சுட்­டி­யது.

சிங்­கப்­பூ­ருக்கு வரு­முன் ஆணை­யத்­தின் 'ஒன்­மோட்­டா­ரிங்' இணை­யத்­த­ளத்­தில் 'விஇபி'க்கு விண்­ணப்­பம் செய்து, ஒப்­பு­தல் பெற்­றி­ருப்­பது கட்­டா­யம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!