செய்திக்கொத்து

பசுமைக் கப்பல் மையத்துக்கு 9,000 சதுர மீட்டர் இடம் ஒதுக்கீடு

'சதர்ன் வாட்டர்ஃபிரண்ட்' எனப்படும் தெற்கு நீர்முகப்பில் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட மையத்தை அமைப்பதற்காக 9,000 சதுர மீட்டர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்குள் அங்கு பசுமை எரிபொருளைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கான சோதனைத் தளம், காட்சிக் கூடம் ஆகியவை அமையவிருக்கின்றன.

'த வேவ்ஸ்' எனப்படும் புதிய மையம் கடல்துறைத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான நிலையமாகவும் விளங்கும். அதன் மேற்கூரையில் அமைந்திருக்கும் உணவு, பானக் கடைகள் வருகையாளர்களை ஈர்க்கும் என்று நம்பப்படுவதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று தெரிவித்தது. புதிய மையத்தைக் கட்டுவதற்கான சரியான இடம் குறித்து நகர மறுசீரமைப்பு ஆணையத்துடன் கலந்து பேசிவருவதாக அது குறிப்பிட்டது.

மரினா சவுத் பியர் வட்டாரத்தில் அமையவிருக்கும் புதிய மையம் குறித்த தகவலை, சிங்கப்பூர் கடல்துறை வாரத்தின்போது ஆணையம் வெளியிட்டுள்ளது.

கொவிட்-19: அன்றாடத் தொற்று 4,269, மேலும் மூவர் மரணம்

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் 4,269 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உறுதியானது. கிருமித்தொற்றால் மேலும் மூன்று பேர் மாண்டனர்.

நேற்று முன்தினம் 416 கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். தடுப்பூசிக்குத் தகுதிபெறும் 96 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மக்கள்தொகையில் 72 விழுக்காட்டினர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!