மாதர்களின் மகத்தான அறிவியல் ஆற்றல் வீண்போகக்கூடாது

முரசொலி

உல­கம் எவ்­வ­ளவோ மாறி­விட்­டது. அது­வும் இந்த 21வது நூற்­றாண்டு பிறந்­தது முதலே மாற்­றம் வேக மெடுத்­து­விட்­டது. இந்த மாற்­றத்­திற்கு அடிப்­ப­டை­யாக இருந்து கிரி­யா­ஊக்­கி­யா­கச் செயல்­படும் அம்­சங்களில் அறி­வி­யல் மிக­முக்­கி­ய­மா­னதாக உள்­ளது.

புதுப்புது மாற்­றங்­க­ளைத் தழு­விக்­கொள்­ளாத எந்த ஒரு நாடும் சமூ­க­மும் மக்­களும் உல­கத்­துடன் ஒட்ட ஒழு­க­லைக் கல்­லா­த­வர்­க­ளாக ஆகி பின் தங்கிவிடு­வார்­கள் என்­பது திண்­ணம்.

அறி­வி­யல் காலத்­தின் கட்­டா­யம் என்று ஆகிவிட்ட நிலை­யில் அதற்கு இது­வரை இல்­லாத அள­வுக்கு அதிக முக்­கி­யத்­து­வத்தை தர உலக நாடு­கள் ஒருபடி மேலாக இப்­போது செயல்­பட்­டு­வ­ரு­கின்­றன.

அறி­வி­யல் துறை என்­பது நிமி­டத்­திற்கு நிமி­டம் வினா­டிக்கு வினாடி வளர்­கின்ற ஒரு துறை. ஆகை­யால் இதில் எப்­போ­துமே மெத்­த­னம் கூடாது என்­பதைக் கருத்­தில் கொண்டு, அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் ஆகி­ய­வற்றை மக்­க­ளுக்கு அதி­கம் போதிக்க நாடு­கள் பல்­வேறு முயற்­சி­களை முடுக்­கி­விட்டு வரு­கின்­றன.

இதில் சிங்­கப்­பூர் ஒரு படி முன்­னி­லை­யில் செயல் பட்டு வரும் நாடு. இயற்கை வளம் இல்­லாத நிலை யில், தனக்கு உள்ள ஒரே வள­மான மக்­கள் வளத்தை மிகத் திறம்­பட, அதி விவே­க­மாக பயன்­ப­டுத்­திக் கொள்ள சிங்­கப்­பூர் இடை­வி­டாது எடுத்­து­வ­ரும் முயற்­சி­கள், அம­லாக்­கும் திட்­டங்­கள் ஏரா­ளம்.

இருந்­தா­லும்­கூட இதில் தனது மனித வளத்தை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள இய­லாத அள­வுக்கு ஒரு சங்­க­டத்தை, சவாலை சிங்­கப்­பூர் எதிர்நோக்­கு­கிறது.

அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறியி­யல், கணி­தம் ஆகி­ய­வற்­றில் ஆண்­க­ளுக்­கும் பெண்­க­ளுக்­கும் இடை­யில் நில­வும் இடை­வெ­ளி­தான் அந்­தச் சவால்.

இந்­தப் படிப்­பு­களில் நாட்­டத்­துடன் சேர்ந்து நன்றாகப் படித்து பட்­டம், பட்­ட­யம் பெறும் பெண்கள் ஆண்­க­ளுக்குச் சமமாக இருக்­கி­றார்­கள். அதேபோல் அவர்­கள் ஆண்­க­ளைப்­போ­லவே படித்து முடித்து வேலை பார்க்­க­வும் ஆசைப்­ப­டு­கி­றார்­கள்.

ஆனால் படித்த துறை­யில் வேலை­யில் சேரும் பெண்­க­ளின் அள­வைப் பார்க்­கை­யில்­தான் பிரச்சினை தலை­தூக்­கு­கிறது.

இந்­தப் படிப்பை முடித்து பட்­டம், பட்­ட­யம் பெற்ற பெண்­களில் 58% மட்­டும்­தான் வேலை­யில் சேர்ந்தனர். இதில் அதே தகு­தி­க­ளு­டன் படிப்­பு­டன் கூடிய ஆண்­களின் விகி­தாச்­சா­ரம் 70% ஆக இருக்­கிறது.

பொறி­யி­யல், ஆய்வு, அறி­வி­ய­லில் பெண்­கள் மேம்­பாடு (பவர்ஸ்) என்ற ஒரு கல்­விச்செயல்­திட்டத்தை நன்­யாங் தொழில்­நுட்­பப்­ பல்­க­லைக் கழகம் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறது.

இந்தச் செயல்­திட்ட அமைப்பு நடத்­திய ஆய்வு ஒன்­றின் மூலம்­தான் இந்த ஆண்-பெண் விகி தாச்­சார இடை­வெளி நில­வ­ரம் தெரியவந்­துள்­ளது.

இந்­தத் துறை­களில் வேலை பார்க்க பெண்களை­ விட ஆண்­கள் இயற்­கை­யா­கவே சிறந்த நிலை­யில் இருக்­கி­றார்­கள் என்ற நிலையான ஒரு கலா­சார எண்ணம் சமூ­கத்­தில் நிலவு­கிறது.

பெண்­கள் இந்­தத்­ துறைகளில் வேலை­க­ளைத் தேர்ந்து எடுத்துக்கொள்­வ­தில் இந்த எண்­ணம் அவர்­க­ளி­டம் அதிக தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கிறது என்று இதே கல்­விச்­செ­யல்­திட்ட அமைப்பு நடத்­திய வேறு ஓர் ஆய்வு தெரி­விக்­கிறது. அது­வும் இந்த எண்­ணம் பற்றி எந்த அள­வுக்குப் பெண்­கள் அதி­க­மாக தெரிந்துகொண்டு இருக்­கி­றார்­களோ அந்த அள­வுக்கு அவர்­க­ளி­டம் ஒரு பாத­க­மா­ன மன­உ­ணர்வு ஏற்­ப­டு­கிறது.

இந்த வேலை­களில் தாங்­கள் ஜொலிக்க முடி­யாது. அந்த அள­வுக்கு ஆற்­றல் தங்­க­ளி­டம் இல்லை என்ற முடி­வுக்கு அவர்­கள் வந்­து­வி­டு­கி­றார்­கள்.

இதோடு மட்­டு­மல்ல. அறி­வி­யல், தொழில்­நுட்பம், பொரு­ளி­யல், கணக்­குத் துறை­யைச் சேர்ந்த பெண்­களில் பாதிப்­பேர், தாங்­கள் பெண்­கள் என்­ப­தற்­காக தங்­க­ளுக்கு வேலை கிடைக்­கா­மல் போக­லாம், வேலை­யில் முன்­னேற்­றம் இல்­லா­ம­லும் போக­லாம் என்­றும் நம்­பு­கி­றார்­கள். முடி­வில் இத்­த­கைய வேலை­களைப் பார்க்க பெண்­க­ளுக்கு நாட்­டம் அதி­க­மாக இருக்­கிறது என்­றா­லும்­கூட தொடர்ந்து அந்த வேலை­களில் அவர்­கள் நீடித்து இருப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் மங்­கி­வி­டு­கின்­றன.

'அனைத்­து­லக மாண­வர் மதிப்­பீட்­டுச் செயல்­திட்­டம்' என்ற ஒரு திட்­டத்­தில் கலந்­து­கொள்­ளும் பெண்­கள், அறி­வியலில் ஆண்­க­ளுக்கு ஈடாக திகழ்­கி­றார்­கள். நல்ல முறை­யில் செயல்­ப­டு­கி­றார்­கள்.

இருந்­தா­லும்­கூட ஆண்­கள் அள­வுக்கு இந்­தத் துறை­க­ளுக்குத் தாங்­கள் பொருத்­த­மா­ன­வர்­க­ளாக இல்லை என்ற ஓர் உணர்வு பெண்­க­ளி­டம் நில­வு­வதாகத் தெரியவந்துள்ளது. இது கவ­லைக்குரிய அம்­ச­மாக இருக்­கிறது.

அறி­வி­யல் துறை­களில் உலக அள­வில் உன்னத நிலையை எட்­டக்­கூ­டிய அனு­கூ­லங்­க­ளுடன் திகழ வேண்­டும் என்ற குறிக்­கோ­ளு­டன் தேசிய அள­வில் சிங்­கப்­பூர் முடுக்­கி­விட்டு இருக்­கும் முயற்­சி­க­ளுக்கு இத்­த­கைய மன­நிலை பாத­க­மா­க இருக்­கும் என்பது நிச்சயம். ஊழி­யர் அணி­யில் ஆண், பெண் சரிசம நிலை இருந்­தால் பொரு­ளி­யல் வளர்ச்சி மேம்­படும் என்­பது உலகம் அறிந்துள்ள உண்மை.

இதை எல்­லாம் கருத்­தில்­கொண்டுதான் இந்தத் துறை­களில் அதிக பெண்­களை ஈடு­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சி­கள் இப்­போது புதிய உத்­வே­கத்தை, ஆதரவைப் பெற்று இருக்­கின்­றன.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பொறி­யி­யல் ஆய்வு, அறி­வி­யல் மாதர் மேம்­பாடு செயல்­திட்­டத்­தின் முத­லா­வது ஆண்­டு­வி­ழா­வை­யொட்டி நடந்த ஒரு கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்ட மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங், இதற்­காக தான் $1 மில்­லி­யன் அளிப்­ப­தாக அறி­வித்­தார்.

அறிவியல் துறை­யில் பெண்­க­ளின் ஆற்­ற­லை­அதி­க­ளவு, திறம்­பட பயன்­ப­டுத்­திக்கொள்ள ஓர் உயர்­கல்வி நிலை­யம் எப்­படி செயல்­பட முடி­யும் என்­ப­தற்கு எடுத்­துக்­காட்­டாக இப்­போது இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கம் களத்­தில் குதித்து இருக்­கிறது.

அதன் செயல்­திட்­டம் அறி­வி­யல் துறை­களில் பெண்­கள் அதி­க­மாக ஈடு­பட ஊக்­க­மூட்­டும்; அதற்­கேற்ற சூழலை உரு­வாக்கி உத­வும்; இந்­தத் துறை­களில் பெண்­கள் அதி­கம் ஈடு­ப­டு­வ­தற்கு தடை­யாக உள்ள அம்­சங்­கள் பற்றி ஆராய அது ஆய்வு நடத்­தும்; கல்வி, தேர்ச்சி, பயிற்­சி­களை வழங்கி வாழ்க்­கைத் தொழி­லில் பெண்­கள் மேம்­பட உத­வும்.

அறி­வி­யல் துறை வேலை­களில் மாதர்­க­ளின் ஈடு­பாடு அதி­க­ரிக்க வேண்­டும் என்­பதை முத­லாளி­ களும் சமூ­க­மும் அங்­கீ­க­ரிக்க வேண்­டும்.

இத்துறை­களில் பெண்­கள் ஆண்­க­ளுக்கு நிக­ரான எண்­ணிக்­கை­யில் ஏன் ஈடு­ப­ட­வில்லை என்­ப­தற்­கான கார­ணங்­களைத் தொடர்ந்து அலசி ஆரா­ய­வேண்­டும். இதில் இந்­தப் பல்­க­லைக்­க­ழக செயல்­திட்­ட­மும் அமைச்­சர் போன்ற பெரு­மக்­க­ளின் பேரா­த­ர­வும் மிக முக்­கிய ஊக்­கு­விப்­பாக இருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!