துணைத் தலைவரை லாரன்ஸ் வோங் பின்னர் முடிவு செய்வார்

மக்­கள் செயல் கட்­சி­யின் 4ஆம் தலை­முறை அணி­யின் துணைத் தலை­வர் யார் என்­பதை, அந்­தக் குழு­வின் தலை­வ­ராக தேர்ந்து எடுக்­கப்­பட்டு உள்ள லாரன்ஸ் வோங் உரிய நேரத்­தில் முடிவு செய்­வார் என்று பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று தெரி­வித்­தார்.

ஆளும் மசெ­க­வின் 4ஆம் தலை­முறைத் தலை­வ­ராக லாரன்ஸ் வோங் பெயர் குறிப்­பி­டப்­பட்­ட­தற்கு இரண்டு நாள்­கள் கழித்து நேற்று இஸ்­தானாவில் நடந்த செய்­தி­யா­ளர் சந்­திப்பில் பேசிய பிர­த­மர், முன்னாள் அமைச்­சர் கோ பூன் வான் நடத்தி முடித்­துள்ள கலந்துரை­யா­டல்­கள் 4ஆம் தலை­முறைத் தலை­வ­ரைத் தேர்ந்து எடுக்­கவே இடம்­பெற்ற தாகத் தெரி­வித்­தார்.

அது, துணைத் தலை­வ­ரைத் தேர்ந்து எடுக்­கவோ 5ஆம் தலை­முறை தலை­வ­ரைத் தேர்ந்து எடுக்­கவோ இடம்­பெற்ற ஒன்­றல்ல. ஆகை­யால் துணைத் தலை­வர் பற்றி முடிவு எது­வும் இல்லை என்று திரு லீ கூறி­னார். துணைத் தலை­வர் யார் என்­ப­தைப் பற்­றி­யும் தன­து மையக் குழு­வில் யார் யார் இடம்­பெற்று இருப்­பார்­கள் என்­பது பற்றி­யும் உரிய காலத்­தில் திரு லாரன்ஸ் வோங் முடிவு செய்­வார் என்று திரு லீ தெரி­வித்­தார்.

திரு லாரன்ஸ் வோங்­கும் அவரு­டைய சகாக்­களும் கடு­மை­யா­கப் பாடு­பட்டு மேலும் பல நம்­பிக்­கை­மிகு தலை­வர்­களை அடை­யா­ளம் கண்டு அவர்­களை ஈடு­ப­டுத்தி சிங்­கப்­பூ­ருக்­காக ஐந்­தாம் தலை­முறை அணியை பலப்­ப­டுத்­து­வார்­கள் என்று தான் நம்­பு­வ­தா­க­வும் திரு லீ குறிப்­பிட்­டார்.

அடுத்த பொதுத் தேர்­த­லில் மக்­கள் செயல் கட்சி ஆட்­சி­யைப் பிடித்­தால் திரு லாரன்ஸ் வோங் சிங்­கப்­பூ­ரின் அடுத்த பிர­த­ம­ராக பொறுப்­பேற்­பார் என்­றும் திரு லீ அறி­வித்­தார். இப்­போ­தைய துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் 2018ல் 4ஆம் தலை­முறைத் தலை­வரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட போது அப்­போது வர்த்­தக தொழில் அமைச்­ச­ராக இருந்த சான் சுன் சிங்கை அவர் துணைத் தலைவராக இருக்­கும்­படி கேட்­டுக் கொண்­டார்.

இருந்­தா­லும் திரு ஹெங், 4ஆம் தலை­முறைத் தலை­வர் பொறுப்­பில் இருந்து சென்ற ஆண்டு வில­கிக் கொண்­டார். அதிக அனு­பவத்து டன் கூடிய, தன்­னை­விட குறைந்த வய­துள்ள ஒரு­வர் அடுத்த பிர­த­ம­ராக வழி­விட்டு அவர் அந்த முடிவை எடுத்­தார்.

துணைப் பிர­த­மரை தேர்ந்­தெடுப்­பது பற்றி நேற்று கருத்து கூறிய பிர­த­மர் லீ, இதன் தொடர்­பில் பல வழி­களை கட்சி அலசி ஆராய்ந்து இருப்­ப­தா­கக் கூறினார்.

இத­னி­டையே, நேற்று அதே செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய திரு லாரன்ஸ் வோங், 4ஆம் தலை­முறைக் குழு பன்­மய ஆற்­ற­லை­யும் பலத்­தை­யும் கொண்­ட­து என்றும் அதைத் தான் மிக­வும் மதித்து போற்­று­வ­தா­க­வும் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!