முகங்களை மலர வைக்கும் தொண்டூழியம் 

சித்திரைப் புத்தாண்டை வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடிய விற்பனை நிர்வாகி வசந்தகுமாரி வீராசாமி, 69, இன்று காலை வீட்டுக் கதவைத் திறக்கும்போது ஆலயத்தில் சமைக்கப்பட்ட உணவுப் பொட்டலம் அவர் கைகளில் கிடைத்தது. ஆலயத்திற்கு செல்ல இயலாதபோதும் அங்கிருந்து தம்மைத் தேடி வந்த உணவைக் கண்டு முகம் மலர்ந்தார். பொட்டலத்தைத் தந்த தொண்டூழியருடன் புத்தாண்டு வாழ்த்துகளையும் பரிமாறினார்.

பிறவியிலிருந்தே வாய் பேச, காது கேட்க முடியாத சகோதரியை கணவருடனும் மகளுடனும் பார்த்துக்கொள்ளும் திருமதி வசந்தகுமாரியால் வீட்டுக்கு வெளியே அடிக்கடி செல்ல முடிவதில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை கொவிட்-19 கிருமிப்பரவல் சூழலால் பணிப்பெண் எடுக்க சிரமப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். “சில நேரத்தில் கடைக்குப் போவதும் எனக்கு சிரமமாக இருக்கும். எனவே இதுபோன்ற உணவு விநியோகம் என்னைப் போல வெளியே செல்லச் சிரமப்படுவோருக்கு உதவியாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

திருமதி வசந்தகுமாரியின் குடும்பம் உள்ளிட்ட சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியம் 2,500 உணவுப் பொட்டலங்களை வழங்கியது. சமையல் பொருட்களை வாங்குதல், காய்கறிகளை வெட்டுதல் போன்ற பணிகள் சனிக்கிழமையே தொடங்கிவிட்டன. இன்று காலை ஆலய மடப்பள்ளி சமையற்காரர்கள் உணவைச் சமைத்த பிறகு அறக்கட்டளை வாரியத் தொண்டூழியர்கள் ஒன்றுசேர்ந்து உணவைப் பொட்டலமிட்டனர். அதனைத் தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட சமூக மன்றங்களைச் சேர்ந்த மக்கள் கழக நற்பணி பேரவைத் தொண்டூழியர்கள், தேவைப்படும் குடும்பங்களிடம் உணவைக் கொண்டு சேர்த்தனர்.

வசதி குறைந்தோருக்கு உணவு விநியோகம் செய்யும் இந்த முயற்சியை 2020ஆம் ஆண்டின் நடுவிலிருந்து தொடங்கியதாக இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவைக் குழுவின் தலைவர் சுசிலா கணேசன் தெரிவித்தார். கொவிட்-19 தொடர்பிலான முடக்கநிலையின்போது பாதிக்கபட்ட குடும்பத்திருக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. “மாதத்திற்கு ஒரு முறை நாங்கள் இந்த விநியோகத்தைச் செய்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறோம். சித்திரைப் புத்தாண்டு என்பதால் இம்முறை சுமார் 1,000 இனிப்பு வகைகளைக் கொண்ட பொட்டலங்களையும் சேர்த்தோம்,” என்று அவர் தெரிவித்தார்.

பதினான்கு ஆண்டுகளாக ஆலய நிகழ்ச்சிகளுக்கு காய்கறிகளை வெட்டி தொண்டாற்றுகிறார் திறன் பயிற்றுவிப்பாளர் சுமித்ரி பழனியப்பன், 53. வசதி குறைந்தோருக்கு ஆலயம் வழி சேவை செய்வதில் மனநிறைவு காண்பதாக அவர் கூறினார். தொண்டூழியர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் செவ்வனே செய்வதுடன் பிற தொண்டூழயர்களுக்கு அன்புடன் வழிகாட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!