கழிவறையிலிருந்து பெண்ணுடன் வெளியான ஆடவரிடம் பணம் பறிக்க முயன்ற பாதுகாவலருக்கு சிறை

கொண்டேமினியம் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றியவர் கணேசன் குணசேகரன், 33, உடல் ஊனமுற்றவர்களுக்கான கழிவறையிலிருந்து வெளியேறிய ஜோடியைக் கையும் களவுமாகப் பிடித்தார்.

அந்த ஆடவரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற பின்னர், பாதுகாவலரே கைது செய்யப்பட்டார்.

கணேசன் குணசேகரன் வெஸ்ட் கோஸ்ட் கிரெசண்ட்டில் உள்ள சீஹில் கொண்டோமினியம் வீடுகளில் மூத்த பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றினார்.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி கழிவறையிலிருந்து ஜோடியாக வெளியேறிய ஜப்பானிய ஆடவரையும் பெண்ணையும் அவர் பார்த்தார்.

கொண்டமினியம் வீட்டில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அந்த ஆடவர் மீது விசாரணை நடத்தப்போவதாக கணேசன் குணசேகரன் மிரட்டினார்.

ஆடவரும் பெண்ணும் உடலுறவு கொண்டதாகவும் அந்தப் பெண் மாணவி என்றும் காவல்துறையிடம் புகார் அளித்ததாக அவர் ஜப்பானிய ஆடவரிடம் கூறினார்.

ஆனால் அந்த ஜப்பானியப் பெண்ணுக்கு வயது 26. மேலும், அவர் அந்த கொண்டோமினிய கட்டடத்தில் வசிப்பவர்.

ஆடவரிடம் பணம் பறிப்பதற்காக அவர் அவ்வாறு செய்தார். ஆனால் அதற்காக கணேசன் குணசேகரன் கைது செய்யப்பட்டார்.

மிரட்டிப் பணம் பறிப்பதில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

வியாழக்கிழமை (ஏப்ரல் 21) அன்று, அவருக்கு 27 மாதம் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

தண்டனை விதிக்கப்பட்டபோது காவல்துறை அதிகாரி போல நடித்தது, ஊழல் குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!