சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு சுவீடனில் வர்த்தக வாய்ப்பு

உள்­ளூ­ரில் தொடங்­கப்­பட்­டுள்ள புதிய நிறு­வ­னங்­களும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களும் சுவீ­ட­னைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளு­டன் வர்த்­த­கத்­தில் இணைய வாய்ப்­ப­ளிக்­கும் புதிய திட்­டம் அறி­மு­கம் கண்­டுள்­ளது.

'எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்' அமைப்பு நேற்று இதனை அறி­வித்­தது.

'ஜிஐஏ' எனப்­படும் உல­க­ளா­விய புத்­தாக்­கக் கூட்­ட­ணியை விரைவு­படுத்­தும் புதிய திட்­டம், சிங்­கப்­பூ­ரின் புதிய, தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள், சுவீ­டன் நிறு­வ­னங்­க­ளு­டன் கூட்­டா­கச் செயல்­பட்டு அந்­நாட்­டுச் சந்­தை­யில் கால்­ப­திக்க வகை­செய்­யும்.

சுவீ­ட­னின் வர்த்­தக விதி­மு­றை­கள், வணி­கக் கலா­சா­ரம், அந்­நாட்­டுச் சந்­தை­யில் கால்­ப­திப்­ப­தற்­கான உத்­தி­கள் ஆகி­ய­வற்­றைத் தெரிந்து­கொள்ள ஏது­வாக ஸ்டாக்­ஹோ­மில் எட்டு வார முன்­னோ­டித் திட்­டத்­திற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பங்­கேற்­கும் நிறு­வ­னங்­கள் பங்­கா­ளித்­து­வத்­துக்­கான வாய்ப்­பு­களைக் கண்­ட­றி­யும் நிகழ்ச்­சி­யி­லும் கலந்­து­கொள்­ள­லாம்.

சுவீ­டன் மூல­மாக 'நார்­டிக்' எனப்­படும் வட ஐரோப்­பிய, வட அட்­லாண்­டிக் வட்­டார நாடு­க­ளின் சந்­தை­க­ளுக்­கும் வர்த்­த­கத்தை விரிவு­ப­டுத்­தும் வாய்ப்பை சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் பெறக்­கூ­டும் என்­பதை 'எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்' சுட்­டி­யது.

சுவீ­ட­னின் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான 'எபி­செண்­டர்', அந்­நாட்டு அர­சாங்க அமைப்­பு­க­ளான 'பிசினஸ் சுவீ­டன்', 'வின்­னோவா' ஆகி­ய­வற்­று­டன் இணைந்து 'எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்' இந்த ஏற்­பா­டு­க­ளைச் செய்­துள்­ளது.

எல்­லை­கள் திறக்­கப்­பட்டு உல­கப் பொரு­ளி­யல்­கள் மீட்சி அடை­யும் வேளை­யில், சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் வளர்ச்­சிக்­கான நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தொடங்­க­வும் புத்­தாக்க ஒத்­து­ழைப்பை வலுப்­படுத்­த­வும் இது உகந்த நேரம் என்று 'எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்' அமைப்பின் தலை­வர் பீட்­டர் ஓங் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!