கிராஞ்சி வனப்பகுதியைத் அழித்த மூவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
fa297436-1ccd-4b64-92b2-94ed5d1039ba
இச்சம்பவம் இயற்கை ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்) -

கிராஞ்சி வனப்பகுதியில் ஒரு பகுதி தவறுதலாக அழிக்கப்பட்ட விவகாரத்தின் தொடர்பில் மூவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் (ஜேடிசி) இணை இயக்குநரான 46 வயதான சோங் பூய் ச்சிக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மற்றொரு ஜேடிசி ஊழியரான மூத்த திட்ட நிர்வாகியான 44 வயது நியோ ஜேக் லின் எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். மூன்றாவது நபர் சிபிஜி ஆலோசக நிறுவனத்தின் ஊழியரான 63 வயது டான் சி ச்சி. அவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சமந்தப்பட்டுள்ள நான்காவது ஆடவர் மீது வேறொரு தேதியன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும். தற்போது அவர் மருத்துவ விடுப்பில் உள்ளார்.

சுமார் 40 பறவை வகைகளுக்கு இருப்பிடமாக விளங்கும் 70 ஹெக்டர் பசுமை பரப்பளவு அழிக்கப்பட்டுள்ளதைக் காட்டும் படங்கள் சென்றாண்டு சமூக ஊடகங்களில் வலம்வந்ததை அடுத்து இந்தச் சம்பவம் அம்பலமானது.