பொருளியலைத் தொடர்ந்து மாற்றவேண்டும்: பிரதமர் லீ

கிருமிப் பரவல் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி நாட்டின் பொருளியலை மாற்றவேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற மே தினக் கூட்ட உரையில் அவர் அவ்வாறு கூறினார்.

புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்வது, உருமாற்ற முயற்சிகளைத் தொடர்வது, எதிர்கால சவால்களைச் சந்திக்க மீள்திறனை மேம்படுத்துவது ஆகியவற்றில் சிங்கப்பூர் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.

பொருளியலை உருமாற்றவும், மேம்படுத்தவும் ஊழியர் அமைப்பு முக்கியப் பங்களித்துவருவதாகக் கூறிய திரு லீ, உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் அமைப்பு முயன்றுவருவதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கக் கொள்ளைகளின் அடிப்படையில் மட்டும் பொருளியல் உருமாற்றம் ஏற்படாது. அதற்கு ஒவ்வொரு நிறுவனமும், ஊழியரும் தத்தம் திறன்களை வளர்த்துகொள்ளவும், தொழில்களை உருமாற்றிக்கொள்ளவும் வேண்டும்.

மின்னிலக்கம், தானியக்கமயமாகுதல், திறன்களை மேம்படுத்திக்கொள்வது, பயிற்சிகள் ஆகியவற்றை நாம் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும் என பிரதமர் சொன்னார். இந்த முயற்சிகளை முன்கூட்டியே செய்ததால்தான், கிருமிப் பரவல் ஏற்பட்டபோது, சிங்கப்பூர் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடிந்ததாக திரு லீ கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!