அதிபர் ஹலிமா: கொள்ளைநோயை முஸ்லிம் சமூகம் சிறப்பாக எதிர்கொண்டது

சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் சமூகம் கொள்ளைநோயை எதிர்கொள்வதில் சிறந்த முறையில் பணியாற்றியதாக அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார். கொள்ளைநோய் சமாளிப்பில் கிடைத்த அனுபவம், எந்தவொரு நிச்சயமற்ற நிலைக்கும் இடையூறுகளுக்கும் தன்னைத் தயார்ப் படுத்தவும் பின்னடைவிலிருந்து எளிதில் மீளவும் முஸ்லிம் சமூ கம் கற்றுக்கொண்டதாகவும் காணொளி வாயிலாக விடுத்த நோன்புப் பெருநாள் செய்தியில் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

“கொள்ளைநோயுடன் வாழ்வதற்கான காலத்தில் அடியெடுத்து வைக்கும் நமக்குப் பல புதிய சவால்கள் தோன்றும். ஆயினும் நாம் கடந்து வந்த பாதை இது போன்றவற்றைச் சமாளிக்க உதவும்,” என்றார் அவர்.

சமூக ஊடகத்தில் தமது தகவலைப் பதிவேற்றிய திருவாட்டி ஹலிமா, சமூகத்தின் ஒற்றுமையை கொள்ளைநோய் வலுப்படுத்தி இருப்பதாகவும் தேவையுள்ளோரை ஆதரிப்பதற்கான தீர்வுகளைத் தந்திருப்பதாகவும் கூறினார்.

தேவையுள்ளோருக்கு உதவ சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், பள்ளிவாசல்கள் மற்றும் இதர மலாய்/முஸ்லிம் குழுக்கள் போன்ற அமைப்புகளோடு இணைந்துள்ள தனிப்பட்டவர்கள் களமிறங்கி இருப்பதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

கிருமிப் பரவலைத் தடுக்க, பள்ளிவாசல் தொழுகையில் பங்கேற்போரின் எண்ணிக்கை வரம்பு கடுமையாக்கப்பட்டதைப் போன்ற பல சவால்கள் தோன்றியபோதிலும் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையும் வலிமையும் எப்போதும்போல் தொடருவதாக அவர் கூறினார்.

கொள்ளைநோய்க்கு எதிரான போராட்டத்தில் தனது பங்கை சிறப்புடன் ஆற்றியமைக்காக முஸ்லிம் சமூகத்திற்கும் தேவையுள்ளோரை ஆதரித்ததற்காக சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றத்திற்கும் சமூகத் தலைவர்களுக்கும் அதிபர் ஹலிமா நன்றி தெரிவித்துக்கொண்டார். அத்துடன் எல்லா முஸ்லிம்களுக்கும் அவர் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!