‘பொறுமைக்குக் கிடைத்த பலன்’

சிங்­கப்­பூ­ரில் உள்ள முஸ்­லிம்­கள் இவ்­வாண்டு நோன்­புப் பெரு­நாளைக் கூடு­தல் பண்­டிகை உணர்­வு­டன் கொண்­டா­ட­லாம் என்று     சரான   கூறி­யுள்­ளார். இஸ்­லா­மிய சமூ­கத்­தி­னர் கடைப்­பி­டித்த ஒழுங்கு, அவர்­க­ளின் மீள்­தி­றன், அவர்­கள் செய்த தியா­கங்­கள் ஆகி­ய­வையே அதற்­குக் கார­ணங்­கள் என்று அவர் சுட்­டி­னார்.

இஸ்­லா­மிய சமூ­கம் நடந்­து­கொண்ட விதம், பல சிங்­கப்­பூர் வாசி­க­ளின் உயிர்­க­ளைப் பாது­காக்க உத­வி­ய­தாக திரு மச­கோஸ் குறிப்­பிட்­டார். கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ள­தால் இவ்­வாண்­டின் நோன்­புப் பெரு­நாள் கொண்­டாட்­டங்­கள் தனிச் சிறப்­பு­வாய்ந்­தவை என்று நோன்­புப் பெரு­நா­ளுக்­கான தமது அறிக்கையில் அவர் கூறி­னார்.

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டுள்­ள­தால் வெள்­ளிக்­கி­ழ­மை­தோ­றும் பள்­ளி­வா­சல்­களில் நடை­பெ­றும் வழி­பா­டு­கள், நோன்­புப் பெரு­நாள் காலத்­தில் மேற்­கொள்ளப்படும் சிறப்பு வழி­பா­டு­கள் ஆகியவற்றில் கூடு­த­லானோர் பங்­கேற்­ற­னர்.

"குடும்­பத்­தா­ரு­டன் உற­வி­னர்­களும் ஒன்­றாக நோன்பு துறந்து உறவை வலுப்­ப­டுத்­திக்­கொண்­ட­தைப் பற்றித் தெரியவந்தபோது நான் மிகுந்த மன­நி­றைவை அடைந்­தேன்," என்று திரு மச­கோஸ் மகழ்ச்சி தெரி­வித்­தார். நோன்­புப் பெரு­நா­ளுக்­கான சந்­தை­கள் மீண்­டும் அமைக்­கப்­பட்­ட­தும் பல­ருக்­குப் பெரும் மகிழ்ச்சி அளித்­துள்­ளது.

கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்கி சுமார் ஈராண்­டு­கள் ஆகி­விட்­டன. அதற்­குப் பிறகு முதன்­மு­றை­யாக இவ்வாண்டு சமூ­கத்­தி­னர் பெரிய அள­வி­லான கொண்­டாட்­டங்­களில் ஈடு­பட முடிகிறது.

மசகோஸ்: நோன்புப் பெருநாளைக் கூடுதல் பண்டிகை உணர்வுடன் கொண்டாடலாம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!