உயரும் டாக்சி சேவை கட்டணம்; மக்கள் கோபம்

மாலை ஆறு மணி­ய­ள­வில் வாடகை வாக­னச் சேவை­க­ளுக்­கான செய­லி­களில் ஒரு மணி நேரத்­துக்­கும் மேலாக தேடி­ய­போ­தும் வாக­னம் கிடைப்­ப­தில்லை. 'கிராப்', 'கோஜெக்', 'கம்­ஃப்ர்ட்­டெல்­குரோ' ஆகிய அனைத்து நிறு­வனங்­க­ளின் செய­லி­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

டாக்சி நிறுத்­தி­மி­டத்­துக்­குச் சென்­றா­ல் அங்கு பலர் நீண்ட வரி­சை­யில் காத்­துக்­கொண்­டி­ருப்­பர். ஒரு­வ­ழி­யாக அரு­கில் வேறு பகுதி­யில் இருக்கும் டாக்­சியை நிறுத்தி அதில் பய­ணம் மேற்­கொள்­ளும்­போது வரும் கட்­ட­ணம், வாடகை வாகன செய­லி­களில் நிர்­ண­யிப்­பதில் கிட்­டத்­தட்ட பாதி­யாக இருக்கும்.

சிங்கப்பூரில் பெரும்பாலான கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வரும் வேளையில் இது பல பயணிகள் எதிர்நோக்கிவரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

கடந்த ஈராண்­டு­க­ளாக டாக்சி, வாடகை வாக­னச் சேவை­க­ளுக்­கான தேவை குறைந்­தி­ருந்­தது. இப்­போது கூடு­த­லா­னோர் வேலையிடங்களுக்குப் போகின்­ற­னர், இரவில் வெளியே செல்­கின்றனர்.

பொது­வாக அதி­க­மா­னோர் இப்­போது வெளியே செல்­வ­தால் உச்ச நேரங்­களில் டாக்சி, வாடகை வாக­னச் சேவை­க­ளுக்­கான கட்­ட­ணம் இரண்டு அல்­லது மும்­ம­டங்­கும் ஆகிறது.

கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து டாக்சி, வாடகை வாகன ஓட்­டு­நர்­க­ளின் எண்­ணிக்கை 80 விழுக்­காட்­டுக்­கும் மேல் குறைந்­துள்­ளது. அது­வும் இத்­த­கைய பிரச்­சி­னை­க­ளுக்­குக் கார­ணம்.

சென்ற ஆண்டு நவம்­பர் மாத நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் 15,048 டாக்சி ஓட்­டு­நர்­கள் இருப்­ப­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் புள்ளி விவ­ரங்கள் தெரி­விக்­கின்­றன. 2019ஆம் ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 18,542ஆக இருந்­தது.

தனி­யார் வாடகை வாகன ஓட்டு­நர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் 77,141லிருந்து 68,091க்குச் சரிந்­துள்­ளது.

பிரச்­சி­னை­யைச் சமா­ளிக்க இர­வில் கூடு­தல் பய­ணங்­களை மேற்­கொள்­ளு­மாறு தனது ஓட்­டு­நர்­களை ஊக்­கு­வித்து வரு­வ­தாக 'கம்­ஃபர்ட்­டெல்­குரோ,' ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சிடம் தெரி­வித்­தது. ஆனால், அந்­நி­று­வனம் தற்­போ­தைக்கு இதன் தொடர்­பி­ல் நிதி சார்ந்த அனு­கூலங்­களை வழங்­க­வில்லை. 'கோஜெக்'­கும் தகுந்த முயற்­சி­களை எடுத்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தது. இது குறித்து 'கிராப் கருத்து தெரிவிக்கவில்லை.

இதற்­கி­டையே, டாக்சி ஓட்­டு­நர்­கள் இன்­ன­மும் சாங்கி விமான நிலை­யத்­திற்­குச் சென்று பய­ணி­களுக்­கா­கக் காத்­தி­ருக்­கத் தயங்கு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது. தற்­போது அதி­க­மா­னோர் மீண்­டும் விமா­னப் பய­ணங்­களை மேற்­கொண்டு வரும்­போ­தும் இந்­நிலை உரு­வெ­டுத்­துள்­ளது.

இதனால் பயணிகள் கூடுதல் நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!