மார்பகப் புற்றுநோய்க்கு வலியில்லா காந்த சிகிச்சை: பல்கலைக்கழக வல்லுநர்கள் கண்டுபிடிப்பு

மார்­ப­கப் புற்­று­நோய் அணுக்­களைக் கொல்­வ­தற்கு புதிய வழி ஒன்றை சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த அறி­வி­யல் வல்­லு­நர்­கள் கண்­டு­பி­டித்து இருக்­கி­றார்­கள்.

புற்­று­நோய் அணுக்­களைக் காந்தப் புலங்­க­ளுக்கு உட்­ப­டுத்தி வலி­யில்­லா­மல் அவற்றைக் கொல்­வது புதிய காந்தத் தொழில்நுட்ப சிகிச்சை மூலம் சாத்­தி­ய­மா­கிறது.

வருங்­கா­லத்­தில் வேதி சிகிச்­சைக்­கான மருந்து அளவைத் தங்­களு­டைய சிகிச்சை முறை குறைத்து­விடும் என்று அந்த வல்­லு­நர்­கள் நம்­பு­கி­றார்­கள்.

ஆகை­யால், நோயாளிகளிடம் ஏற்படக்கூடிய வேண்­டாத விளைவு­களும் குறைந்­து­வி­டும் என்று தெரிவிக்கப்பட்டது.

புதிய சிகிச்சை தொழில்நுட்பம், காந்­த அதிர்வுக­ளைப் பயன்­ப­டுத்தி புற்­று­நோய் அணுக்­களில் சுவா­சத்­தைத் தூண்­டி­வி­டு­கிறது. இதன்­மூ­லம் அந்த உயி­ர­ணுக்­களில் புர­தத்­தின் அளவு அதி­க­ரிக்­கிறது.

காந்­தப் புலங்­க­ளுக்கு உட்­ப­டும்­போது அத்­த­கைய உயி­ர­ணுக்­கள் கடை­சி­யில் மாண்­டு­வி­டு­கின்­றன.

இந்­தக் காந்த சிகிச்சை, புற்­று­நோய் உயி­ர­ணுக்­களை மட்­டுமே குறி­வைக்­கிறது என்­பது முன் மருந்தகப் பரி­சோ­த­னை­கள் மூலம் தெரி­ய­வந்து இருக்­கிறது.

புற்­று­நோய்க்கு அளிக்­கப்­படும் வேதி சிகிச்சை, நல்ல ஆரோக்­கி­ய­மான உயி­ர­ணுக்­க­ளை­யும் சேதப்­ப­டுத்­தி­வி­டும்.

ரத்­தம் வழி­யாக வேதி சிகிச்சை மருந்­து­கள் போக முடி­யாத புற்­று­நோய் உயி­ர­ணுக்­க­ளை­யும் காந்­த அதிர்வுகள் குறி­வைத்து அழித்­து­வி­டும் என்று இணைப் பேரா­சி­ரி­யர் ஆல்­ஃபி­ரிடோ பிராங்கோ-ஓப்­ரி­கான் தெரி­வித்­தார்.

இவர், இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சுகா­தா­ரப் புத்­தாக்கத் தொழில்­நுட்­பப் பயி­ல­கத்­தைச் சேர்ந்­த­வர்.

பேரா­சி­ரி­யர் ஆல்­ஃபி­ரிடோ, காந்­தத் தொழில்­நுட்­பச் சிகிச்சையை கண்­ட­றி­யும் குழு­வுக்­குத் தலைமை வகித்­த­வர்.

இவர்கள் உருவாக்கி இருக்கும் சிகிச்சை சாதனம் காந்த அதிர்வு களை உருவாக்குகிறது. அந்த அதிர்வுகள் மார்பகப் புற்றுநோய் உயிரணுக்களை கொல்லுகின்றன.

காந்த சிகிச்சையின்போது படுக்கையில் நோயாளி குப்புறப் படுத்து இருப்பார். அந்தப் படுக்கை யில் அவரின் மார்புப் பகுதி இருக் கும் இடத்தில் ஒரு திறப்பு இருக்கும்.

குறுகிய வெற்றுக் கூம்புபோல் இருக்கும் காந்த சிகிச்சைக் கருவி அந்தத் திறப்பின் கீழ் இருக்கும்.

சிகிச்சை கருவி இயங்கும்போது தலைமுடியை உலர்த்தும் சாதனத் தைப்போல் காந்த அதிர்வுகள் ஏற்பட்டு மார்பகப் புற்றுநோய்க் கட் டிக்குள் செல்லும். அவை புற்றுநோய் உயிரணுக்களைத் தாக்கி கொன்று விடும்.

தேசிய பல்­கலைக்­க­ழகப் புற்­று­நோய்ப் பயி­ல­கத்­து­டன் சேர்ந்து இந்த ஆண்­டின் இரண்­டா­வது பாதி­யில், ஓராண்டு பரி­சோ­த­னை­யைத் தொடங்க இந்த ஆய்வுக் குழு திட்­ட­மி­டு­கிறது. புதிய சிகிச்சை கருவி எந்த அள­வுக்­குப் பாது­காப்­பா­ன­தாக இருக்­கும் என்­பது இதன்­மூ­லம் தெரி­ய­வ­ரும்.

இந்­தப் பரி­சோ­த­னை­யில் கிட்­டத்­தட்ட 30 மார்­ப­கப் புற்­று­நோய் நோயா­ளி­கள் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!