"கதை முடிந்தது என்று நினைத்தேன்" - பயங்கர அனுபவமாக மாறிய ஜோகூர் உல்லாசப் பயணம்

வார இறுதியில் சிங்கப்பூர் குடும்பம் ஒன்று சென்ற உல்லாச ஜோகூர் பயணம் பயங்கரச் சிக்கலில் முடிந்தது.

ஜோகூர் பனைமரத் தோட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த மோட்டார்சைக்கிளைத் தவிர்க்க காரை வளைத்தார் ஓட்டுநர்.

அப்போது கார் தலைகீழாக கவிழ்ந்து சாலை அருகில் உள்ள புதருக்குள் விழுந்தது.

காரிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த அந்தக் குடும்பம் கடைசியில் கார் கண்ணாடிகளை உடைத்துத் தப்பித்தது.

அந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 1) காலை 11,30 மணியளவில் ஜோகூரில் உள்ள ஜாலான் நியோர்-குலுவாங்கில் நடந்தது.

எல்லாம் நொடிப் பொழுதில் நடந்ததாக காரை ஓட்டிச்சென்ற திரு சோ, 60, கூறினார்.

காரில் இருந்த ஐந்து பேரும் அதிர்‌ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பித்ததாக அவர் சொன்னார்.

காரில் திரு சோவுடன் அவருடைய மனைவி, அக்கா, அக்காவின் கணவர், தங்கை ஆகியோரும் இருந்தனர்.

வாரஇறுதியை ஜொகூரில் கழிக்க எண்ணிய அவர்கள் கூரின் ஜோகூரின் வேறொர் இடத்திலிருந்து குலுவாங்கை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

காரை வளைத்தபோது சாலை ஈரமாக இருந்ததால் சக்கரங்கள் வழுக்கி, கார் புதருக்குள் கவிழ்ந்தாக குலுவாங் போலிசார் கூறினர்.

"கார் தலைகீழே இருந்தது. நான்கு சக்கரங்களும் மேலே நோக்கி இருந்தன. எங்கள் கதை முடிந்துவிட்டது என்று நினைத்தேன்," என்றார் திரு சோ.

கார் கண்ணாடிகளை தாங்கள் உதைத்து, அவற்றை உடைத்து காரிலிருந்து வெளியேறியதாக திரு சோ கூறினார்.

வழிப்போக்கர்கள், அந்த பகுதியில் உள்ளவர்கள், போக்குவரத்துப் போலிசார் எனப் பலரும் தங்களுக்கு உதவி செய்தனர் என்றார் திரு சோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!